மிசோரம் பேரவைத் தேர்தல்: 174 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!

மிசோரத்தில் 16 பெண்கள் உள்பட மொத்தம் 174 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
மிசோரம் பேரவைத் தேர்தல்: 174 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!

மிசோரம் சட்டப்பேரவை தேர்தலுக்கு 40 உறுப்பினர்களைக் கொண்ட தொகுதியில், 16 பெண்கள் உள்பட மொத்தம் 174 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 

ஐந்து மாநிலத்துக்கு அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடம் வேட்பாளர்கள் ஆர்வத்துடன் தங்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்து வருகின்றனர். 

அதன்படி, மிசோரம் மாநிலத்தில் 40 உறுப்பினர்களுக்கு இதுவரை 174 வேட்பாளர்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை பகலில் நடைபெறும். அக்.23 வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதியாகும். 

ஆளும் மிசோ தேசிய முன்னணி (எம்என்எஃப்), எதிர்க்கட்சியான சோரம் மக்கள் இயக்கம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் அனைத்து வேட்பாளர்களும் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். 

இதில் 23 பாஜக வேட்பாளர்களும், 4 ஆம் ஆத்மி, 27 வேட்பாளர்கள் சுயேச்சைகளாக வேட்புமனு ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

மிசோரம் சட்டப்பேரவைக்கு நவம்பர் 7-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவும், டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com