
ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி
ஜி20 மாநாட்டுக்கு இடையே பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.
இந்தியாவின் தலைமையில் ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு, தில்லியில் சனி, ஞாயிற்றுக்கிழமை(செப். 9, 10) என இரு நாள்கள் நடைபெறுகிறது.
இதில் கலந்துகொள்வதற்காக ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் சனிக்கிழமையே தில்லி வந்தடைந்தனர். தொடர்ந்து இன்று காலை 10.30 மணியளவில் பிரகதி அரங்கத்தில் கூட்டம் தொடங்கியது. பாரத மண்டபம் பகுதியில் அனைத்து நாட்டின் தலைவர்களையும் பிரதமர் மோடி வரவேற்றார்.
இதையும் படிக்க | தொகுதிப் பங்கீடு: எடியூரப்பா கூறியது அவரின் தனிப்பட்ட கருத்து - குமாரசாமி
இன்று இரவு குடியரசுத் தலைவர் சார்பில் உலக நாடுகளின் தலைவர்களுக்கு விருந்து அளிக்கப்படுகிறது. இதில் நாட்டின் அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களும் கலந்துகொள்கின்றனர்.
ஜி20 மாநாட்டுக்கு இடையே பிரதமர் நரேந்திர மோடி பிற நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். நேற்று அமெரிக்க அதிபர் பைடனுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இன்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். பாரத மண்டப வளாகத்தில் வைத்து நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், முதலீடு உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டதாகத் தெரிகிறது.

இதையும் படிக்க | ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணம்: ஜி20 மாநாட்டில் மோடி பேச்சு
அதுபோல, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோவையும் பிரதமர் மோடி தனியே சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் சில நாட்டுத் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசவிருக்கிறார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...