
ஜெய்ராம் ரமேஷ்
புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டிருந்த தகவலையடுத்து, செய்யவும் மாட்டேன், செய்யவிடவும் மாட்டேன் என்று காங்கிரஸ் கட்சி கருத்துக் கூறியிருக்கிறது.
இந்தியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள வந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது, இந்தியாவில் மனித உரிமைகளை மதிப்பது, பத்திரிகை சுதந்திரம் குறித்து பேசியதாக வியத்நாமில் தெரிவித்திருந்தார்.
இந்தியாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடு முடிவடைந்ததும், புது தில்லியிலிருந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது வியத்நாம் பயணத்தை மேற்கொண்டார்.
இதையும் படிக்க.. இந்தியாவில் மனித உரிமைகள், பத்திரிகை சுதந்திரம் பற்றி மோடியுடன் பேசினேன்: ஜோ பைடன்
வியத்நாம் பயணத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், 'மனித உரிமைகளை மதிப்பது' மற்றும் 'பத்திரிக்கை சுதந்திரம்' போன்ற பிரச்னைகள் குறித்து தான் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது எழுப்பியதாக குறிப்பிட்டிருந்தார்.
Mr. Modi saying to Mr. Biden — “Na Press Conference karoonga,
— Jairam Ramesh (@Jairam_Ramesh) September 10, 2023
Na karne doonga” has had no impact.
Mr. Biden is saying the same things in Vietnam which he said to Mr. Modi’s face in India — on respecting human rights, the role of civil society and free press. pic.twitter.com/08WthcKdUC
ஜோ பைடனின் இந்த தகவலைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்திட்டுள்ளார். அதாவது, பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம், நான் செய்தியாளர்களை சந்திக்க மாட்டேன், யாரையும் சந்திக்க விடவும் மாட்டேன் என்பதே, இது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
இந்த நிலையில்தான், வியத்நாமில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மனித உரிமைகள், பொது சமூகத்தின் பங்கு மற்றும் சுதந்திரப் பத்திரிகையின் பங்கு பற்றி, இந்தியாவில் பிரதமர் மோடியிடம் அவர் சொன்ன அதே விஷயங்களை வியத்நாமில் பைடன் பகிர்ந்துள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், அமெரிக்க அதிபர் ஜா பைடனின் குழுவினரை, பிரதமர் - அதிபருக்கு இடையே நடந்த சந்திப்பின்போது பேசப்பட்ட விஷயங்கள் குறித்து புது தில்லியில் செய்தியாளர்கள் சந்தித்துக் கேள்வி எழுப்ப அனுமதிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...