சந்திரயான்-2 ஆர்பிட்டர் பற்றி இஸ்ரோவின் ஆச்சரிய தகவல்

சந்திரயான்-2 ஆர்பிட்டர் பற்றி இஸ்ரோவின் ஆச்சரிய தகவல்

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் மற்றும் ரோவர்  தான் உறக்கநிலையில் உள்ளது, ஆனால் சந்திரயான்-2 ஆர்பிட்டர் உயிர்ப்புடன் இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

பெங்களூரு: சந்திரயான் திட்டத்தின் அனைத்துக் கருவிகளுமே உறக்க நிலையில் இல்லை, சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் மற்றும் ரோவர்  தான் உறக்கநிலையில் உள்ளது, ஆனால் சந்திரயான்-2 ஆர்பிட்டர் உயிர்ப்புடன் இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

நிலவின் தென்துருவத்துக்கு மிக அருகே தடம்பதித்து, நிலவைச் சுற்றி வந்து பல ஆய்வுகளை நடத்திய விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் உறக்கநிலைக்குச் சென்றுவிட்ட நிலையில், ​​சந்திரயான்-2 இன் ஆர்பிட்டர் (பிரதான்), சந்திரனைச் சுற்றி கண்காணித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 22, 2019 அன்று நிலவில் தரையிறங்கும் போது, எதிர்பாராதவகையில், மேற்பரப்பில் விழுந்து நொறுங்கியபோதும், பிரதான் ஆர்பிட்டர் ஆனது கடந்த நான்கு ஆண்டுகளாக சந்திரனைச் சுற்றி வந்துகொண்டிருக்கிறது. இதனால், சந்திரயான்-2 திட்டம் பகுதியளவு வெற்றி என்றே அறியப்படுகிறது.

இது குறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முன்னதாக கூறியிருந்ததாவது, க்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் - பூமியில் இருக்கும் இஸ்ரோ நிலையம் இடையேயான தொடர்புக்கு பிரதான் ஆர்பிட்டர் உதவும் என்றும், சந்திரயான்-3 விண்கலத்தின் 14 நாள் ஆய்வுக்கும், உறுதுணையாக இருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தது.


இது குறித்து இஸ்ரோ விஞ்ஞானி கூறுகையில், ஆர்பிட்டர் நல்ல இயங்கும் நிலையில் உள்ளது. ஆர்பிட்டர் அனுப்பும் அனைத்துத் தகவல்களும், பெங்களூருவுக்கு அருகே உள்ள ஆழ் விண்வெளி அமைப்பில் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதில்தான், சந்திரயான் - 2 ஆர்பிட்டர், விக்ரம் லேண்டரை எடுத்த புகைப்படம் பகிரப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com