மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா மதுபானி மாவட்டத்தில் உள்ள ஜாஞ்சர்பூரில் மாபெரும் பேரணியில் இன்று உரையாற்றுகிறார்.
தர்பங்கா விமான நிலையத்தில் மத்திய உள்துறை அமைச்சரை கட்சியின் மாநில தலைவர் சாம்ராட் சௌத்ரி தலைமையில் பாஜக மூத்த தலைவர்கள் வரவேற்றனர்.
மத்திய உள்துறை அமைச்சரின் வருகையையொட்டி பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், ட்ரோன் விமானங்கள் மூலம் கண்காணிக்கப்படுவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
ஷா சனிக்கிழமை மதியம் தர்பங்கா விமான நிலையத்தைச் சென்றடைவார். பின்னர் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் ஜான்ஜர்பூருக்குச் செல்வார் எனக் கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், பாஜக முன்னாள் தலைவர் சஞ்சய் ஜ்ய்வால், தர்பங்கா எம்.பி கோபால் ஜீ தாக்கூர் மற்றும் பல மூத்த மாநில பாஜக தலைவர்கள் சமூக வலைத்தளங்களில் மக்கள் பேரணியில் கலந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஜாஞ்சர்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிறகு, உள்துறை அமைச்சர் அராரியா மாவட்டத்தில் உள்ள ஜோக்பானிக்கு புறப்படுகிறார், அங்கு அவர் சஷ்த்ரா சீமா பாலில் புதிதாக கட்டப்பட்ட வீட்டு வளாகத்தைத் திறந்து வைக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மும்பைக்கு எதிராக சிஎஸ்கே பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள்!

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!

வாழை - 2 திரைப்படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்?

மணிப்பூர்: குண்டுவீச்சுத் தாக்குதலில் பலியான குழந்தைகளின் உடல்கள் ஒப்படைப்பு
வீடியோக்கள்

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


