

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஸ்பெயின் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வியாழக்கிழமை காலை ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்றடைந்தார்.
துபையில் அடுத்த 2 நாள்கள் தங்கியிருக்கும் பானர்ஜி, வணிக உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். மேலும் அங்குள்ள என்ஆர்ஐ குழுவையும் அவர் சந்திக்க உள்ளார்.
மாநிலத்தில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகளில் பானர்ஜி செப்.12 அன்று ஸ்பெயினுக்குப் புறப்பட்டார். அவர் ஸ்பெயினில் உள்ள மாட்ரிட் மற்றும் பார்சிலோனாவுக்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.