ஆறு மாத குழந்தையை 50 இடங்களில் கடித்த எலிகள்.. பெற்றோர் கைது!

பிறந்து ஆறு மாதமேயான பிஞ்சு குழந்தையை 50 இடங்களில் எலி கடித்துக் குதறியுள்ள சம்பவம் அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. 
ஆறு மாத குழந்தையை 50 இடங்களில் கடித்த எலிகள்.. பெற்றோர் கைது!

பிறந்து ஆறு மாதமேயான பிஞ்சு குழந்தையை 50 இடங்களில் எலி கடித்துக் குதறியுள்ள சம்பவம் அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. 

இண்டியானாவின் எவான்ஸ்வில் பகுதியில் வசித்துவருபவர்கள் டேவிட், ஏஞ்சல் ஷோனபாம் தம்பதி. இவருக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது. இவர்களுடன் குழந்தையின் அத்தை டெலானியா துர்மன் மற்றும் வேறொரு தம்பதியினரும் குழந்தையுடன் வசித்து வந்தனர். 

இந்த நிலையில், 6 மாதமேயான குழந்தையின் உடலெங்கும் காயங்கள் இருப்பதாகக் குழந்தையின் தந்தை எவான்ஸ்வில் உள்ள அவசர சேவைக்கு தகவலளித்தார். இதையடுத்து, காவல்துறையினர் விரைந்து வந்தபோது குழந்தையின் தலை மற்றும் முகத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ரத்த காயங்களுடன் குதறியுள்ளது தெரியவந்தது. குழந்தையில் வலது கையிலிருந்த நான்கு விரல்கள் மற்றும் கட்டை விரலில் சதை இல்லாமல் இருந்தது. விரல் நுனி எலும்புகள் தெரியும் அளவிற்குக் காயங்கள் இருந்தது. 

பாதிக்கப்பட்ட குழந்தை இண்டியானாபொலிஸ் நகர மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. குழந்தையில் வெப்பநிலை குறைந்ததையடுத்து குழந்தைக்கு முதலுதவி செய்து, உடனே ரத்தம் ஏற்றப்பட்டது. அங்குக் குழந்தைக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையின் மூலம் குழந்தை உயிருக்கு ஆபத்தின்றி உயிர்பிழைத்தது. 

இதையடுத்து, பாதிக்கப்பட்ட குழந்தையின் வீட்டை காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். சோதனையில் போலீஸாருக்கு திடுக்கிடும் தகவல்கள் தெரிந்தது. வீடு முழுவதும் பராமரிப்பின்றி குப்பைகூளமாகவும், அதில் நிறைய எலிகள் வசிப்பதும் தெரிய வந்தது. சிகிச்சை முடிந்து குழந்தை பராமரிப்பு நிலையத்திற்கு மாற்றப்பட்டது. வீட்டிலிருந்த மற்ற குழந்தைகளும் காப்பகத்திற்கு மாற்றப்பட்டனர். 

ஏற்கனவே, வீட்டில் உள்ள குழந்தைகளை எலி கடித்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, குழந்தை வளர்ப்பில் பொறுப்பற்ற முறையிலிருந்த குற்றத்திற்காகவும், பராமரிக்கத் தவறிய குற்றத்திற்காகவும், தம்பதியர் மற்றும் அத்தையை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com