அதிகரிக்கும் கடன்: மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி கண்டனம்!

பிரியங்கா காந்தி கேள்வி: மக்களின் கடன் சுமை ஏன் அதிகரிக்கிறது?
பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி(கோப்புப் படம்)

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வாத்ரா, பாஜக தலைமையிலான மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக, வேலையின்மை, பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றின் சுமை அதிகரிக்கும் வேளையில் அரசு ஏன் மக்களை கடனில் மூழ்கடிக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த மாதம் தனது பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏப்ரல் 1 முதல் தொடங்கும் அடுத்த நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க ரூ.14.13 லட்சம் கோடி அளவில் பத்திரங்களை வெளியிட்டு கடன் வாங்க முன்மொழிந்தார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் ஹிந்தியில் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில், நடப்பு நிதியாண்டில் ரூ.14 லட்சம் கோடிக்கு மேல் அரசு கடன் வாங்கப் போவதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏன்? சுதந்திரம் அடைந்ததிலிருந்து 2014 வரையிலான 67 ஆண்டுகளில், நாட்டின் மொத்த கடன் ரூ .55 லட்சம் கோடியாக இருந்தது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில், மோடி அரசு அதை ரூ.205 லட்சம் கோடியாக அதை உயர்த்தியுள்ளது. மேலும் கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு ரூ.150 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது.

இன்று, நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சராசரியாக ரூ.1.5 லட்சம் கடன் உள்ளது. அதே வேளையில் எந்த அம்சத்திற்கு இந்த பணம் பயன்படுத்தப்பட்டது? என்று ராகுல் காந்தி வினவியுள்ளார் தனது மைக்ரோ பிளாக்கிங் தளத்தில்.

பெரிய அளவில் வேலைகள் உருவாக்கப்படுகிறதா அல்லது வேலைகள் உண்மையில் மறைந்து விட்டனவா என்று அவர் மேலும் வினவியுள்ளார்.

விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகிவிட்டதா? பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் புதுப்பொலிவுடன் திகழ்கிறதா? பொதுத்துறை நிறுவனங்கள் பலப்படுத்தப்பட்டுள்ளதா அல்லது பலவீனப்படுத்தப்பட்டுள்ளதா? பெரிய தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளனவா? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது நடக்கவில்லை என்றால், பொருளாதாரத்தின் முக்கிய துறைகள் பழுதடைந்த நிலையிலும், தொழிலாளர் சக்தி வீழ்ச்சியடைந்திருந்தால், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அழிக்கப்பட்டிருந்தால், இந்த பணம் எங்கே சென்றது என்று காங்கிரஸ் தலைவர் கேள்வி மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த பணம் யார் மீது செலவிடப்பட்டது? இதில் எவ்வளவு பணம் தள்ளுபடி செய்யப்பட்டது? பெரிய கோடீஸ்வரர்களின் கடன் தள்ளுபடிக்காக எவ்வளவு பணம் செலவிடப்பட்டது? என்று அவர் கேள்வி மேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

இப்போது, மத்திய அரசு மீண்டும் கடன் வாங்கத் தயாராகி வரும் நிலையில், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக, வேலையின்மை, பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றின் சுமை கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்து வரும் நிலையில், பாஜக அரசு ஏன் மக்களை கடனில் மூழ்கடிக்கிறது என்ற கேள்வி எழுகிறது என்றார் ராகுல் காந்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com