ராகுல் மீதான அவதூறு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு!
ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஏப்ரல் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஏப்ரல் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு, பெங்களூருவில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது பேசிய ராகுல் காந்தி, பாஜகவின் அப்போதைய தலைவராகப் பொறுப்பு வகித்த அமித் ஷா குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தாக புகார் எழுந்தது.
இதனைத்தொடர்ந்து, பாஜ தலைவர் விஜய் மிஸ்ரா, கடந்த 2018-ஆம் ஆண்டு ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில், வழக்கின் மீதான விசாரணை சுல்தான்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 4(நாளை) கடைசி என்பதால் ராகுல் காந்தியின் விசாரணை மற்றொரு நாள் தள்ளிவைக்கக் கோரி, காங்கிரஸ் தலைவரின் வழக்குரைஞர் காஷி பிரசாத் சுக்லா நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்தார்.
இதையடுத்து, ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு ஏப்ரல் 12-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...