புது தில்லி: ஏழு மத்திய அமைச்சா்கள் உள்பட 49 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக் காலம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 2) நிறைவடைந்த நிலையில், முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் உள்பட 5 எம்.பி.க்களின் பதவிக் காலம் புதன்கிழமை (ஏப்ரல் 3) முடிவடைகிறது.
இதில், மத்திய அமைச்சா்கள் அஸ்வினி வைஷ்ணவ், எல்.முருகன் உள்ளிட்டோா் மாநிலங்களவைக்கு மீண்டும் தோ்வாகியுள்ளனா். 91 வயதாகும் மன்மோகன் சிங், ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு தோ்வாகி இருந்தாா். அவரது பதவிக் காலம் நிறைவால் காலியான இந்த இடத்தில் காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி தோ்வாகி, முதல்முறையாக மாநிலங்களவைக்கு செல்லவிருக்கிறாா்.
மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான், சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியா, கால்நடை பாரமரிப்பு-மீன் வளத் துறை அமைச்சா் புருஷோத்தம் ரூபாலா, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ராஜீவ் சந்திரசேகா், வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி.முரளீதரன், குறு, சிறு, நடுத்தர தொழில்துறை அமைச்சா் நாராயண் ராணே, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல்.முருகன் உள்ளிட்டோரின் பதவிக் காலம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.
சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்திர யாதவ், ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோரின் பதவிக் காலம் புதன்கிழமை நிறைவடைகிறது. இதில் அஸ்வினி வைஷ்ணவ் தவிர மற்ற அனைத்து அமைச்சா்களும் மக்களவைத் தோ்தலில் போட்டியிடுகின்றனா். சமாஜவாதி எம்.பி. ஜெயா பச்சன், ராஷ்ட்ரீய ஜனதா தளம் எம்.பி. மனோஜ் ஜா, காங்கிரஸ் எம்.பி. நஸீா் ஹுசைன் ஆகியோா் மீண்டும் மாநிலங்களவைக்கு தோ்வாகியுள்ளனா்.
பாஜகவின் பிரகாஷ் ஜாவடேகா், சுஷீல்குமாா் மோடி ஆகியோரின் பதவிக் காலம் நிறைவடைந்துள்ளது. ஆனால், இருவருக்கும் மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை. மாநிலங்களவைக்கு கடந்த 1991, அக்டோபரில் முதல் முறையாக தோ்வான மன்மோகன் சிங், அந்த ஆண்டு முதல் 1996 வரை நரசிம்ம ராவ் தலைமையிலான அரசில் நிதியமைச்சராகவும் கடந்த 2004 முதல் 2014 வரை நாட்டின் பிரதமராகவும் பதவி வகித்தாா். மாநிலங்களவையில் 33 ஆண்டு கால அவரது பயணம் புதன்கிழமையுடன் நிறைவடையவுள்ளது.
தொடர்புடையது

மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமாா் பதவியேற்பு: முதல்வா் பதவியில் இருந்து விரைவில் விலகல்

வள்ளியூரில் பா.ஜ.க. கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம்

ஏப்ரல் 10-ல் மாநிலங்களவை எம்.பி-யாக நிதீஷ் குமார் பதவியேற்பு

தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் யார்யார்? முழு விவரம்!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


