சுனிதா கேஜரிவால் பின்னணியில் இருந்த படத்தை கவனித்தீர்களா?

சுனிதா கேஜரிவால் பின்னணியில் இருந்த புகைப்படம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சுனிதா கேஜரிவால் பின்னணியில் இருந்த படத்தை கவனித்தீர்களா?

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் கடிதத்தை அவரது மனைவி சுனிதா கேஜரிவால் இன்று வாசித்தார்.

அரவிந்த் கேஜரிவால் எழுதிய கடிதத்தை இன்று சுனிதா கேஜரிவால் வாசிக்கும்போது, அவரது பின்னணியில் மூன்று புகைப்படங்கள் இருந்தன. ஒன்று, பகத் சிங், மற்றொன்று அம்பேத்கர் புகைப்படங்கள். இதற்கு நடுவில், சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் நிற்பது போன்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

சுனிதா கேஜரிவால் பின்னணியில் இருந்த படத்தை கவனித்தீர்களா?
என்ன கொடுமை? கிளாம்பாக்கத்தால் ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

அரவிந்த் கேஜரிவால் எழுதியிருக்கும் கடிதத்தில், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அனைவரும் நாள்தோறும் தங்கள் தொகுதிக்குச் சென்று அங்கு மக்களை நேரடியாகச் சந்தித்துப் பேசி குறைகளைக் கேட்டறிந்து தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

இந்த கடிதம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதெல்லாம் வேறு. ஆனால், தேர்தல் நேரத்தில், ஒரு மாநில முதல்வர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால், அவரது தேர்தல் பிரசாரம் முழுக்க முழுக்க முடக்கப்பட்டிருக்கும் நிலையில், மக்களுக்கு, தங்களது தலைவர் ஒருவர் சிறைக்குப் பின்னால் இருக்கிறார் என்பதை அவ்வப்போது நினைவூட்டும் வகையில் சுனிதா கேஜரிவால் தொடர்ந்து விடியோ வழியாக தில்லி மக்களிடையே உரையாற்றி வருகிறார்.

சுனிதா கேஜரிவால் பின்னணியில் இருந்த படத்தை கவனித்தீர்களா?
வரி விலக்குப் பெற 80சி பிரிவு மட்டும்தானா என்ன? வரியைக் குறைக்கும் பல வழிகள்!

இதன் மூலம், அவர் கைது செய்யப்பட்டு, அவர் என்ன செய்யக் கூடாது என்று மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் நினைத்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டுகிறதோ, அதையே வேறுவகையில் நிறைவேற்றிக்கொள்கிறது ஆம் ஆத்மி.

அதாவது, தான் சிறையில் இருப்பதால், தில்லியில் உள்ள 2 கோடி மக்களும் எந்தக் கஷ்டத்தையும் அனுபவிக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளதாக சுனிதா குறிப்பிட்டுள்ளார். இந்த விடியோவானது ஒரு நிமிடம் அளவுக்கு நீடிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com