குஜராத்தில் ஓயாத க்ஷத்ரிய பிரச்னை: ஆட்டம் காண்கிறதா, பாஜக கோட்டை?

குஜராத்தில் ஓயாத க்ஷத்ரிய பிரச்னையால் ஆட்டம் காண்கிறது பாஜக கோட்டை.
BJP
BJP

திலீப் சிங் க்ஷத்ரியா

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில், மக்களவைத் தேர்தல் ஒருபக்கம் சூடுபிடித்தாலும், பாஜகவுக்கு என்னவோ பிரச்னைகள்தான் சூடுபிடிக்கின்றன.

குஜராத்தில் பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது முதலே விவகாரம்தான். அதிலும், பாஜக வேட்பாளர் புருஷோத்தம் ரூபாலாவுக்கும், க்ஷத்ரிய சமுதாய மக்களுக்கும் ஆகவே ஆகாது. அவரை வேட்பாளராக அறிவித்தது முதலே, திரும்பப் பெறுமாறு க்ஷத்ரிய மக்கள் கோரி வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கு இடையே சுமூகமான நிலையை ஏற்படுத்த மாநில பாஜக தலைவர் சி.ஆர். பட்டீல் கடும் முயற்சி மேற்கொண்டும் எதுவும் பலனளிக்கவில்லை.

BJP
என்ன கொடுமை? கிளாம்பாக்கத்தால் ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இதற்கிடையே, முன்னாள் கட்சித் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ராஜேந்திர சிங் ராணாவோ, ரூபாலாவின் கருத்துகளால் க்ஷத்ரியர்களின் மனம் புண்பட்டுள்ளது. எனவே, அவர்களின் போராட்டம் தொடரும் என்று கட்சித் தலைமைக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

பாஜக வேட்பாளர் புருஷோத்தம் ரூபாலாவை மன்னிக்குமாறும் பட்டீல் வலியுறுத்தியிருந்தார். இதற்கிடையே, தனது கருத்துக்கு ரூபாலாவும் மூன்று முறை மன்னிப்பும் கோரிவிட்டார், எனினும், ராஜ்புத் சமுதாய மக்களின் கோபம் மட்டும் குறையவில்லை. இதனை சமாளிக்க, குஜராத் முதல்வருடன், ராஜ்புத் சமுதாய பிரதிநிதிகளை சந்திக்க வைக்கும் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எங்களது எண்ணம் இதுதான், ரூபாலா ஏற்கனவே மன்னிப்புக் கேட்டுவிட்டால், மக்கள்தான் மனம் இறங்கி மன்னிக்க வேண்டும் என்கிறார் பட்டீல்.

இதற்கிடையே பேசிய ராஜேந்திர சிங் ராணா, ரூபாலாவில் மேற்கொள்ளப்பட்ட விமர்சனம், ஒரு சமுதாயத்தை உயர்த்தியும், ஒரு சமுதாயத்தை தாழ்த்தியும் பேசும் வகையில் இருந்தது. இது க்ஷத்ரிய சமுதாய மக்களின் மனங்களை கடுமையாக பாதித்தது. இது தற்போது அதிருப்தியாக மாறியிருக்கிறது. இதற்காக இப்போது போராட்டம் நடத்தப்படுகிறது என்கிறார். ஷத்ரிய மக்களுக்கு தனது ஆதரவையும் அவர் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

BJP
குஜராத் வேட்பாளர் தேர்வில் குளறுபடியா? மோடிக்காக வாக்களிக்கச் சொல்லும் பாஜக

பாஜக தரப்பில் எடுக்கப்பட்ட முன்முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. ரூபாலாவை வேட்பாளராக அறிவித்ததை திரும்பப் பெறுமாறு க்ஷத்ரிய சமுதாய மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். ராஜ்கோட்டில் ரூபாலா மேற்கொண்ட பிரசாரத்தின் நகலுக்கு எதிரான, வதோதரா மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ள க்ஷத்ரிய சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள், கையில், ரூபாலாவுக்கு எதிராக பதாகைகளையும் வைத்துக் கொண்டு, ரூபாலாவுக்கு எதிராகக் கோஷமும் எழுப்பினர்.

பரூச்சிலும், பாஜக வேட்பாளர் ரூபாலாவை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது. ரூபாலாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பாஜக தரப்பில், பிரச்னையை சுமூகமாக முடிக்க கடும் முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் பிரச்னை என்னவோ ஓய்வதற்கான வழியின்றி, போராட்டம் தீவிரமடைந்து வருவதையே தற்போதைய நிலைமை காட்டுகிறது. போராட்டம் திரும்பப்பெறுமா? வேட்பாளர் திரும்பப் பெறப்படுவாரா? சில நாள்களில் தெரியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com