என்ன கொடுமை? கிளாம்பாக்கத்தால் ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தால் ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம்
கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம்DOTCOM
Published on
Updated on
2 min read

சென்னை: தெற்கு ரயில்வேயில், 2023 - 24ஆம் ஆண்டுக் காலத்தில் நாள்தோறும் பயணிக்கும் ரயில் பயணிகளின் எண்ணிக்கை 1.86 லட்சமாக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 11 சதவீதம் அதிகமாகும்.

குறிப்பாக எட்டு இணை வந்தே பாரத் ரயில்கள் உள்பட புதிய ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்ததே இதற்குக் காரணமாக பார்க்கப்பட்டாலும், கிளாம்பாக்கம் பேருந்து முனையமும் இதற்கு மறைமுகக் காரணமாக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் கடந்த ஜனவரி மாதம் திறந்துவைக்கப்பட்டது. அதன்பிறகுதான், அனைத்து ரயில்களிலும் குறிப்பாக மதுரை, தமிழகத்தின் இதர மாவட்டங்களுக்கும் கேரளத்துக்குச் செல்லும் ரயில்களுக்கும் பயணிகள் அதிகரித்துள்ளனர். வார நாள்களில், ரயில்களில் பயணிக்கும் பயணிகள் எண்ணிக்கை 75 - 80 சதவீதம் இருக்கும். இது கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறக்கப்பட்டதும் 95 - 100 சதவீதமாக மாறியதாக வணிகத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம்
குஜராத் வேட்பாளர் தேர்வில் குளறுபடியா? மோடிக்காக வாக்களிக்கச் சொல்லும் பாஜக

அதாவது, பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் கிளாம்பாக்கம் செல்வதற்கு கூடுதல் சிரமம் ஏற்பட்டதால், ரயிலில் பயணிப்பது அதிகரித்திருப்பதாகவும், இந்த மாற்றம் தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கூடுதலாக, சென்னை புறநகர் ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும், தென்னக மாவட்டங்களுக்குச் செல்லும் மற்றும் கேரளத்துக்கு இயக்கப்படும் ரயில்களிலும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

எக்ஸ்பிரஸ் குழுமத்துக்குக் கிடைத்திருக்கும் தரவுகளின்படி, 2023-24 ஆம் ஆண்டில் சராசரியாக ஒரு நாளைக்கு 19.39 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர், இது முந்தைய ஆண்டு 17.53 லட்சமாக இருந்துள்ளது. தெற்கு இரயில்வேயின் மொத்த பயணிகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் சென்னை புறநகர் ரயில்களும் பங்கு வகிக்கிறது. சென்னையின் நான்கு புறநகர் பிரிவுகளில், தினமும் சுமார் 10.5 - 11 லட்சம் பயணிகள் ரயிலில் பயணம் செய்துள்ளனர்.

மேலும், புள்ளிவிவரம் கூறுவது என்னவென்றால், 2022-23ல் 64 கோடியாக இருந்த தெற்கு ரயில்வேயில் பயணித்த பயணிகளின் எண்ணிக்கை 2023-24ல் 70.8 கோடியாக அதிகரித்துள்ளது. பயணிகள் போக்குவரத்து மூலம் வருவாய் ரூ.6,347 கோடியில் இருந்து ரூ.7,133 கோடியாக உயர்ந்துள்ளது.

கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம்
மகாராஷ்டிரத்தில் 4 தொகுதிகளைப் பறிக்கும் முனைப்பில் பாஜக: என்ன செய்யப்போகிறது சிவ சேனை?

அதேவேளையில, ரயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்ததற்காக ரூ.121 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டு ரூ.115 கோடியாக இருந்தது.

தெற்கு ரயில்வேயின் ஆண்டு மொத்த வருவாய் ரூ.12,020 கோடியை எட்டியுள்ளது, இது முந்தைய ஆண்டை விட 10 சதவீதம் அதிகமாகும். இது பயணச்சீட்டு மூலம் கிடைத்த வருவாய் ரூ.7,151 கோடி, சரக்குகளை கையாண்டதற்கான வருவாய் ரூ.3,674 கோடி, ரூ.570 கோடிக்கு இதர பயிற்சிகள் மூலமாகவும் ரூ.624 கோடி பலதரப்பட்ட வருவாய்களையும் உள்ளடக்கியதாக உள்ளது.

முக்கியமான பகுதிகளில் ரயில்களின் வேகத்தை மேம்படுத்தும் திட்டங்கள் முடிக்கப்பட்டு கடந்த ஆண்டு 70 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. “அரக்கோணம் - ஜோலார்பேட்டை மண்டலத்தில், வேகம் மணிக்கு 110லிருந்து 130 கிமீ ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com