'ஒட்டுமொத்த தில்லியும் என் குடும்பம்': திகார் சிறையிலிருந்து கேஜரிவால்

ஒட்டுமொத்த தில்லியும் என் குடும்பம் என்று கேஜரிவால் எழுதிய கடிதத்தை சுனிதா வாசித்தார்.
சுனிதா கேஜரிவால்(கோப்புப்படம்)
சுனிதா கேஜரிவால்(கோப்புப்படம்)ANI

ஒட்டுமொத்த தில்லியில் வாழும் 2 கோடி மக்களும் எனது குடும்பம் என்று, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் கடிதத்தை மனைவி சுனிதா வாசித்தார்.

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அரவிந்த் கேஜரிவால் சிறையிலிருந்து எழுதிய கடிதத்தை சுனிதா கேஜரிவால் இன்று தில்லி மக்களுக்காக வாசித்தார்.

சுனிதா கேஜரிவால்(கோப்புப்படம்)
குஜராத்தில் ஓயாத ஷத்ரிய பிரச்னை: ஆட்டம் காணும் பாஜக கோட்டை

அதில், அவர் கூறியிருப்பதாவது, தான் சிறையில் இருந்தாலும் தில்லியில் வாழும் 2 கோடி மக்களும் எனது குடும்பம்தான், அவர்களுக்கு எந்த பிரச்னையும் வரக்கூடாது.

நான் சிறையில் இருக்கும் ஒரே காரணத்தால் தில்லி மக்களுக்கு எந்த பிரச்னையும் வரக்கூடாது. எனவே, அனைத்து எம்எல்ஏக்களும் தங்களது தொகுதிக்கு நாள்தோறும் செல்லுங்கள், மக்களின் பிரச்னைகள் கேட்டு அதனை சரி செய்யுங்கள் என்று கேஜரிவால் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாக சுனிதா வாசித்துள்ளார்.

சுனிதா கேஜரிவால்(கோப்புப்படம்)
குஜராத்தில் 3 ஆண்டுகளில் 25,478 தற்கொலைகள்; பிரதமர் மௌனம் சாதிப்பது ஏன்?- கார்கே கேள்வி

முன்னதாக, தில்லி கலால் கொள்கை முறைகேடு விவகாரத்தில் தன்னை அமலாக்கத் துறை கைது செய்ததற்கு எதிராக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிந்து உத்தரவை தில்லி உயர்நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அமலாக்கத் துறை கடந்த மார்ச் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

தேர்தல் நடைபெறும் சமயத்தில் அமலாக்கத் துறை தன்னை கைது செய்தது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கு முரணானது என்று கூறி, தில்லி உயர்நீதிமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மனு தாக்கல் செய்தார். மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, இருதரப்பு வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதி ஸ்வர்ண கந்த ஷர்மா, இந்த விவகாரத்தில் உத்தரவை நிறுத்திவைப்பதாகக் கூறி, இவ்வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com