மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.1 லட்சம்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.1 லட்சம்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

புது தில்லி: மகாலட்சுமி திட்டத்தின் கீழ், ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மூத்த பெண்மணிக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தொண்டர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் அறிக்கை இன்று வெளியாகியிருக்கிறது.

புது தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில், கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் எம்.பி. சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டனர். தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள் குறித்து ப. சிதம்பரம் உரையாற்றினார்.

மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.1 லட்சம்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
கல்விக் கடன் தள்ளுபடி; புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து: காங்கிரஸ் உறுதி

புது தில்லியில் இன்று வெளியிடப்பட்ட மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை, வேலை, பொருளாதாரம், மக்கள் நலனை மையப்படுத்தி இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள்..

மகாலட்சுமி திட்டத்தின் கீழ், ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மூத்த பெண்மணிக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்

நாடு முழுவதும் சமூக, பொருளாதார சாதிவாதி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு அனைத்து சாதியினருக்கும் விரிவுபடுத்தப்படும்.

அரசியல் சாசன 8வது அமைப்பில் ஏனைய மொழிகளையும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை கொண்டுவரப்படாது.

நீட் தேர்வு கட்டாயமல்ல என்றும், நீட் தேர்வு, க்யூட் தேர்வுகளை மாநில அரசுகள் தேவைப்பட்டால் நடத்திக்கொள்ளலாம் என்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கல்விக் கொள்கை, மாநில அரசிகளிடம் கலந்தாலோசனை நடத்திய பிறகே அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com