சத்தீஸ்கருக்கு சொந்தம் கொண்டாடும் பாஜக! நிறைவேறுமா எண்ணம்?

சத்தீஸ்கருக்கு சொந்தம் கொண்டாடும் பாஜகவின் எண்ணம் நிறைவேறுமா?
சத்தீஸ்கருக்கு சொந்தம் கொண்டாடும் பாஜக! நிறைவேறுமா எண்ணம்?

ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 11 மக்களவைத் தொகுதிகளுக்கும் மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு பாஜக - காங்கிரஸ் என இருமுனைப் போட்டி நிலவுகிறது.

நாம்தான் சத்தீஸ்கர் மாநிலத்தை உருவாக்கினோம். எனவே, நாம்தான் அதனை வளர்க்க வேண்டும் என்று பாஜக, சத்தீஸ்கர் வாக்காளர்களிடம் முழங்கி வருகிறது.

மக்களவைத் தேர்தல்களில், பாஜக தொடர்ந்து, இந்த மாநிலத்தில் தனது வாக்கு விகிதத்தை அதிகரித்துக்கொண்டே வருகிறது, 1998ஆம் ஆண்டு 10 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெற்றிருந்தது என்ற நிலையை மாற்றி, கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 9 தொகுதிகளை பாஜக கைப்பற்றியிருந்தது.

சத்தீஸ்கருக்கு சொந்தம் கொண்டாடும் பாஜக! நிறைவேறுமா எண்ணம்?
மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.1 லட்சம்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

சத்தீஸ்கர் மாநிலத்தை பிரித்து தனி மாநிலமாக அறிவித்ததற்கான பெருமையை பாஜக தன்வசம் வைத்துக் கொள்கிறது. கடந்த 2000-ஆவது ஆண்டு நவம்பர் மாதம் அடல் பிஹாரி வாஜ்பாயி தலைமையிலான மத்திய அரசு சத்தீஸ்கரை தனி மாநிலமாக அறிவித்திருந்தது.

இந்த மாநிலத்தை கடந்த 24 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் பாஜக ஆண்டுள்ளது, 8 ஆண்டுகள் காங்கிரஸ் ஆண்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி மக்களவைத் தேர்தலில் வெற்றிபெறாவிட்டாலும் கூட, பாஜகவை விட சற்று குறைவான வாக்குகளைப் பெற்றே தோல்வியடைந்தது. கடந்த 2014ல், பாஜகவின் வாக்கு வங்கி 49.7 சதவீதம் என்றால் காங்கிரஸ் 39.1 சதவீதம். அடுத்து 2019ஆம் ஆண்டு தேர்தலிலும் இரு கட்சிகளுக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் வெறும் 10 சதவீதம்தான்.

கடந்த தேர்தல்களின் முடிவுகள், மாநிலத்தில் ஏற்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள், சிக்கல்களை தீர்த்த கட்சிகளுக்கு சாதகமாக அமைந்திருந்ததையே காட்டுகிறது. இந்த ஆண்டு மோடிக்காக, இங்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்று பாஜக நம்புகிறது. அயோத்தி கோயிலைக் காட்டி வாக்கு கேட்பதோடு, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நடந்த முறைகேடுகளையும் சுட்டிக்காட்டி வருகிறது.

சத்தீஸ்கருக்கு சொந்தம் கொண்டாடும் பாஜக! நிறைவேறுமா எண்ணம்?
என்ன கொடுமை? கிளாம்பாக்கத்தால் ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

காங்கிரஸ் கட்சி பல முக்கிய வாக்குறுதிகளோடு, இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கடந்த 2023 பேரவைத் தேர்தலின்போது 46 சதவீத வாக்குகளுடன் பாஜக ஆட்சியைப் பிடித்தது. கடந்த ஆண்டைக் காட்டிலும் 4 சதவீதம் வாக்குகள் குறைவாகவே பெற்றிருந்தது. காங்கிரஸ் கட்சியோ, தனது வாக்கு வங்கியை உறுதியாக நம்பி வருகிறது.

ஆனால், அதிருப்தியில் இருந்த பல காங்கிரஸ் தலைவர்களும் அவர்களது ஆதரவாளர்களும் அண்மைக் காலங்களில் கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணைந்தனர்.

இதற்குப் பதிலளித்த காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அவைத் தலைவருமான சரண்தாஸ் மஹந்த், முன்னாள் முதல்வர் பாகேல் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள் செய்த தவறுகள் காரணமாக சத்தீஸ்கர் 2023 சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சித் தோல்விக்கு வழிவகுத்தது என்றார். சத்தீஸ்கரில் உள்ள 11 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது.

பஸ்தார், கான்கேர், ராஜ்நந்த்கான், மஹாசமுந்த் போன்ற மக்களவைத் தொகுதிகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள். எனவே சத்தீஸ்கரில் 80,000 க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்களுடன் மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. மாவோயிஸ்டுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட பஸ்தாரில் முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடத்தப்படுகிறது.

தாம் உருவாக்கிய மாநிலம் என்பதால், தமக்குத்தான் சொந்தம் என்று பாஜக கருதுகிறது. வாக்கு வங்கியை ஓரளவுக்கு முன்னேற்றினாலே மேலும் சில தொகுதிகளைக் கைப்பற்றலாம் என்று கணித்திருக்கலாம் காங்கிரஸ். மக்கள் என்ன நினைத்திருக்கிறார்கள் என்பது ஜூன் மாதம் 4ஆம் தேதி தெரியவரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com