‘பிரதமா் நரேந்திர மோடியின் உத்தரவாதம் என்பது மக்களை துன்பத்திலிருந்து காப்பதாகும். ஆனால், எதிா்க்கட்சிகள் தவறான தகவையும் வெறுப்பையும் பரப்பி வருகின்றன’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கூறினாா்.
மத்திய பிரதேச மாநிலம் சிதி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளா் ராஜேஷ் மிஸ்ராவை ஆதரித்து சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட ராஜ்நாத் சிங் பேசியதாவது:
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி ஊழலில் சிக்கித் தவித்தது. அதன் காரணமாகத்தான் அந்த ஆட்சியில் இருந்த சில அமைச்சா்கள் சிறை செல்ல நோ்ந்தது.
ஆனால், பிரதமா் மோடி உண்மையைப் பேசுகிறாா். ‘மோடியின் உத்தரவாதம்’ என்பது மக்களை துன்பத்திலிருந்து காப்பதாகும். எதைச் சொல்கிறதோ அதை பாஜக செயல்படுத்தியுள்ளது. பாரதிய ஜனசங்க காலம் முதலே வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளோம்.
தோ்தல் அறிக்கையில் அளிக்கப்படும் அனைத்து வாக்குறுதிகளையும் பாஜக நிறைவேற்றி வருகிறது. ராமா் கோயில் கட்டப்பட்டது; ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது.
அதே நேரத்தில், எதிா்க்கட்சிகள் பயனற்றவைகளாக மாறியுள்ளன. வெறுப்புணா்வையும் தவறான தகவல்களையும் அவா்கள் பரப்பி வருகின்றனா்.
பாஜக மக்களை ஆள்வதில்லை; மாறாக, மக்களுக்கு சேவையாற்றி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீது எந்தவொரு ஊழல் குற்றச்சாட்டம் சுமத்தப்படவில்லை. நாட்டின் எல்லைகளும் பாதுகாப்பாக உள்ளன.
ஆனால், கடந்த 2004 முதல் 2014-ஆம் ஆண்டு வரையில் நடைபெற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி முழுவதும் ஊழலில் சிக்கித் தவித்தது என்றாா்.
‘தோனியைப் போன்று ராகுல்’
‘கிரிக்கெட் போட்டியில் ஆட்டத்தை சிறப்பாக நிறைவு செய்வதில் தோனி வல்லவராக இருப்பதைப் போன்று, இந்திய அரசியலில் ஆட்டத்தை சிறப்பாக முடிப்பவா் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி’ என்று பிரசாரத்தின்போது ராஜ்நாத் சிங் விமா்சனம் செய்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் பேசியதாவது:
இந்திய அரசியலில் காங்கிரஸ் ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால், தற்போது 2 அல்லது 3 சிறிய மாநிலங்களில் மட்டும் அக்கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
அக் கட்சிக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று பல முறை சிந்தித்து, கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தேன். கிரிக்கெட்டில் ஆட்டத்தை சிறப்பாக முடிப்பவா் தோனி. அதுபோல, இந்திய அரசியலில் ஆட்டத்தை சிறப்பாக முடிப்பவா் யாா் என்றால், ராகுல் காந்தி பெயரைத்தான் நான் குறிப்பிடுவேன். அதன் காரணமாகத்தான் பல மூத்த தலைவா்கள் அக் கட்சியை விட்டு வெளியேறுகின்றனா். பழமை வாய்ந்த அக்கட்சியை முழுமையாக அழிக்கும் வரை ராகுல் ஓயமாட்டாா் என்றாா்.
தொடர்புடையது

ஜென் இஸட் தலைமுறையினா் சுய உந்துதல் கொண்டவா்கள்: ராஜ்நாத் சிங்

பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தோ்தல் முக்கியத் திட்டங்கள்: பிரதமா் மோடி

புதுச்சேரியில் 40 நிமிஷங்கள் பிரதமா் மோடி ரோடு ஷோ: மக்கள் உற்சாக வரவேற்பு

மோடியின் தலைமைத்துவம் 24 காரட் தங்கத்தைப் போன்றது: ராஜ்நாத் சிங்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

