பா.ஜ.க. வேட்பாளராகப் போட்டியிடும் மகன் தோற்க வேண்டும்: ஏ.கே. அந்தோனி

பத்தினம்திட்டா மக்களவை தொகுதியில் காங்கிரஸின் ஆண்டோ அந்தோனி, மார்க்சிஸ்ட்டின் தாமஸ் ஐசக், பாஜகவின் அனில் அந்தோனி போட்டி.
பா.ஜ.க. வேட்பாளராகப் போட்டியிடும் மகன் தோற்க வேண்டும்: ஏ.கே. அந்தோனி

பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் தனது மகன் தோற்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோனி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஏ.கே.அந்தோனியின் மகன் அனில் அந்தோனி காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.

மேலும், மக்களவைத் தேர்தலில் பத்தினம்திட்டா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆண்டோ அந்தோனிக்கு எதிராக பாஜக வேட்பாளராக அனில் அந்தோனி களமிறங்கியுள்ளார்.

இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஏ.கே.அந்தோனி பேசுகையில், எனது மகனும் பாஜக வேட்பாளருமான அனில் தோற்க வேண்டுமென்றும், காங்கிரஸ் வேட்பாளர் ஆண்டோ மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், காங்கிரஸ் தலைவர்களின் குழந்தைகள் பாஜகவில் இணையும் செயல் தவறானது என்றும், காங்கிரஸ்தான் எனது மதம் என்றும் தெரிவித்தார்.

பா.ஜ.க. வேட்பாளராகப் போட்டியிடும் மகன் தோற்க வேண்டும்: ஏ.கே. அந்தோனி
செருப்பு மாலையுடன் சுற்றும் வேட்பாளர்! காரணம் என்ன?

தொடர்ந்து பேசிய ஏ.கே.அந்தோனி, “காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தி தொடர்ந்து மோடி, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸுக்கு எதிராக போராடி வருகின்றனர். கேரள முதல்வர் பினராயி விஜயனின் குற்றச்சாட்டை மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

இந்தியா கூட்டணி நாளுக்குநாள் முன்னேறிக் கொண்டுள்ளது. பாஜகவுக்கான வாய்ப்பு குறைந்துள்ளது. இது ஆட்சி அமைப்பதற்கான நேரமாக கருதுகிறேன்.” எனத் தெரிவித்தார்.

பத்தினம்திட்டா மக்களவைத் தொகுதியில் மூன்று முறை எம்பியாக தேர்வான ஆண்டோ அந்தோனிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் மூத்த தலைவரும் முன்னாள் மாநில நிதியமைச்சருமான தாமஸ் ஐசக் களமிறக்கப்பட்டுள்ளதால், அத்தொகுதியில் கடும் போட்டி நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com