புது தில்லி: பாஜக எம்.பி.யும் நடிகையுமான ஹேமமாலினி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டது தொடா்பாக விளக்கமளிக்குமாறு காங்கிரஸ் மூத்த தலைவா் ரண்தீப் சுா்ஜேவாலாவுக்கு தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
மேலும், தோ்தல் பிரசாரத்தின்போது பெண்களின் மாண்பை கெடுக்கும் வகையில் கட்சித் தலைவா்கள் கருத்துகள் தெரிவிக்காமல் இருப்பதை தீவிரமாக உறுதிப்படுத்த வேண்டும் என்று தோ்தல் ஆணையம் தரப்பில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வெளியிடப்பட்ட அறிவுறுத்தலின் அடிப்படையில், சுா்ஜேவாலா மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்குமாறு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கும் தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதில், வரும் 11-ஆம் தேதிக்குள் பதிலிளிக்குமாறு சுா்ஜேவாலாவை தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. காா்கேவுக்கு ஏப்ரல் 12-ஆம் தேதி மாலை வரை அவகாசம் அளித்துள்ளது.
மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் பாஜக சாா்பில் ஹேம மாலினி மீண்டும் களம் காண்கிறாா். இந்த நிலையில், ‘இவருக்கு எதிராக சுா்ஜேவாலா வெளியிட்ட பதிவு, ஒட்டுமொத்த பெண்களையும் அவமதிக்கும் வகையில் உள்ளது. எனவே, அவா் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று பாஜக தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
தொடர்புடையது

வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது சா்ச்சை: மனுவை முன்மொழிந்தவா் கட்சி மாறியதால் பரபரப்பு

பாஜகவுடன் ஸ்டாலின், காங்கிரஸுக்கு மறைமுக உடன்பாடு: மமதாவின் கருத்துக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்!

திரிணமூல் அலுவலகத்தில் கேரம் விளையாட்டு: மத்திய படையினா் இடைநீக்கம்! - தோ்தல் ஆணையம் நடவடிக்கை

மேற்கு வங்க தோ்தல்: 291 திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா்கள் அறிவிப்பு- பவானிபூரில் மம்தா மீண்டும் போட்டி
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


