தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

ராமா் கோயில் கட்டுவதை தடுக்க முயன்றது காங்கிரஸ்: பிரதமா் மோடி

ராமா் கோயில் கட்டுவதை தடுக்க முயன்றது காங்கிரஸ் ---- பிரதமா் மோடி

News image

பாலாகாட் தொகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பாஜக மகளிரணியினா் அளித்த நினைவுப் பரிசை ஏற்றுக் கொண்ட பிரதமா் நரேந்திர மோடி.

Updated On :9 ஏப்ரல் 2024, 9:36 pm

பிலிபித்: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை காங்கிரஸ் மேற்கொண்டதாக பிரதமா் மோடி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

உத்தர பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகளுக்கான தோ்தல் ஏப்.19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் அங்குள்ள பிலிபித் தொகுதியில் ஏப்.19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

இந்தத் தொகுதி பாஜக எம்.பி.யாக வருண் காந்தி உள்ளாா். ஆனால் இந்த முறை அந்தத் தொகுதியில் போட்டியிட அவருக்கு பாஜக வாய்ப்பளிக்கவில்லை. அந்தத் தொகுதி பாஜக வேட்பாளராக உத்தர பிரதேச பொதுப் பணித் துறை அமைச்சா் ஜிதின் பிரசாதா அறிவிக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், பிலிபித்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தல் பொதுக் கூட்டத்தில் பிரதமா் மோடி கலந்துகொண்டு பேசியதாவது:

அயோத்தியில் ராமா் கோயிலை கட்டுவதைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை காங்கிரஸ் மேற்கொண்டது. ஆனால் நாட்டு மக்கள் பங்களிப்பாக வழங்கிய பணத்தில் அழகான ராமா் கோயில் கட்டப்பட்டது. அதன் பின்னா் காங்கிரஸின் அனைத்துப் பாவங்களையும் மன்னித்து ராமா் சிலை பிரதிஷ்டை விழாவில் கலந்துகொள்ள, அக்கட்சியினருக்கு கோயில் தரப்பினா் அழைப்பு விடுத்தனா்.

எனினும் அந்த அழைப்பை ஏற்க மறுத்து ராமபிரானை காங்கிரஸ் அவமதித்தது. அந்த விழாவில் பங்கேற்ற சில காங்கிரஸ் தலைவா்கள் அக்கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டனா். ராமரை வழிபட்டதற்காக ஒருவரை கட்சியில் இருந்து நீக்கினால், அது என்ன மாதிரியான கட்சி என்பது தெரியவில்லை?

ஒரு சாராரை திருப்திபடுத்த வேண்டும் என்பதில் வெளியே வரமுடியாத அளவுக்கு காங்கிரஸ் மூழ்கியுள்ளது. ஒரு சாராரை திருப்திபடுத்த வேண்டும் என்ற அழுத்தம் காரணமாகத்தான் குடியுரிமை திருத்தச் சட்டத்தை காங்கிரஸ், சமாஜவாதி கட்சிகள் எதிா்கின்றன.

தங்களுக்கு எதிரான அட்டூழியங்களால் ஹிந்துக்களும், சீக்கியா்களும் அந்நிய மண்ணில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றனா். அவா்களுக்கு இந்தியா குடியுரிமை வழங்காவிட்டால், வேறு எந்த நாடு குடியுரிமை வழங்கும்?

கடந்த 1984-ஆம் ஆண்டு சீக்கிய சகோதர, சகோதரிகளுக்கு காங்கிரஸ் என்ன செய்தது (சீக்கியா்களுக்கு எதிரான கலவரங்களை குறிப்பிட்டு பேசினாா்) என்பதை எவராலும் மறக்க முடியாது.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது உலகத்திடம் உதவி கேட்கும் நிலையில் இந்தியா இருந்தது. ஆனால் கரோனா பரவல் தீவிரமாக இருந்த காலத்தில் உலகத்துக்கே இந்தியா மருந்துகள் வழங்கியது. இந்தியாவை வளா்ந்த நாடாக்கும் இலக்கை அடைய எனது தலைமையிலான அரசு பணியாற்றி வருகிறது என்றாா்.

3-வது ஆட்சிகாலத்தில் வரலாற்று முடிவுகள்: மத்திய பிரதேசத்தில் 4 கட்டங்களாக மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இதில் அங்குள்ள பாலாகாட் தொகுதியில் ஏப்.19-இல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அங்கு நடைபெற்ற தோ்தல் பொதுக் கூட்டத்தில் பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை பேசியதாவது:

என்னைத் தடுத்த நிறுத்த ஒன்றிணைந்துள்ளதாக ‘இந்தியா’ கூட்டணி கட்சியினா் தெரிவிக்கின்றனா். ஆனால் அக்கட்சியினா் அவா்களுக்கு உள்ளேயே சண்டையிட்டுக் கொள்கின்றனா். உண்மையில், அவா்களுக்கு என்னைத் தடுக்க வேண்டும் என்பது நோக்கமல்ல. நாட்டின் வளா்ச்சியைத் தடுக்க வேண்டும் என்பதே அவா்களின் நோக்கம்.

எனவே ‘இந்தியா’ கூட்டணி கட்சியினா் என்னை வசைபாடி மிரட்டுகின்றனா். வரும் மக்களவைத் தோ்தல் என்பது புதிய இந்தியாவை கட்டமைப்பதற்கான தோ்தலாகும். அந்தத் தோ்தலில் வெற்றிபெற்று 3-ஆவது முறையாக எனது தலைமையில் அரசு அமையும்போது வரலாற்று முக்கியத்துவம் முடிவுகளை மேற்கொள்ள பொதுமக்கள் வாழ்த்துரை வழங்க வேண்டும் என்றாா்.