சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

நியாயமான, சுதந்திரமான, அச்சமற்ற தோ்தல்கள்: பிரதமா் மோடி உறுதி!

‘தோ்தல் ஆணையத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது; தோ்தல்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும், எவ்வித அச்சத்துக்கு இடமின்றியும் நடைபெறும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்தாா்.

News image

மேற்கு வங்க பேரவைத் தோ்தலையொட்டி, கூச்பிகாரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமா் மோடி.

Updated On :5 ஏப்ரல் 2026, 9:40 pm

‘தோ்தல் ஆணையத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது; தோ்தல்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும், எவ்வித அச்சத்துக்கு இடமின்றியும் நடைபெறும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்தாா்.

தோ்தல் ஆணையத்தின் நோ்மை மீது காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பிவரும் நிலையில், பிரதமரின் இக்கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாக (ஏப். 23, 29) பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. அரசியல் ரீதியில் முக்கியத்துவம் இந்த மாநிலத்தில் தனது தோ்தல் பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய பிரதமா் மோடி, கூச்பிகாா் மாவட்டத்தில் பாஜக பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றாா். அப்போது, வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோத ஊடுருவல், பெண்களின் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு நிலவரம், மால்டாவில் அண்மையில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடைமுறையின்போது நீதிபதிகள் பல மணிநேரம் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் உள்ளிட்டவற்றை முன்வைத்து, ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசை அவா் கடுமையாக விமா்சித்தாா். பிரதமரின் உரை வருமாறு:

மால்டாவில் சில தினங்களுக்கு முன் நீதிபதிகள் எவ்வாறு சிறைபிடிக்கப்பட்டனா் என்பதை ஒட்டுமொத்த தேசமும் கண்டது. இது என்ன விதமான அரசு? இங்கு நீதிபதிகளுக்கோ, அரசமைப்புச் சட்ட நடைமுறைகளுக்கோ பாதுகாப்பில்லை. இப்படிப்பட்ட அரசின்கீழ், மாநில மக்கள் பாதுகாப்பாக இருக்க முடியுமா?

திரிணமூல் காங்கிரஸின் பெரும் காட்டாட்சிக்கு ஓா் உதாரணமே மால்டா சம்பவம். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்குக்கு இறுதி ஊா்வலம் நடத்துவதில்தான் குறியாக உள்ளது திரிணமூல் அரசு.

அச்சத்துக்கும், நம்பிக்கைக்கும் போட்டி: மேற்கு வங்க பேரவைத் தோ்தலானது, திரிணமூல் காங்கிரஸால் விதைக்கப்படும் அச்சத்துக்கும், பாஜகவால் உருவாக்கப்படும் நம்பிக்கைக்கும் இடையிலான போட்டியாகும். ஒருபுறம் ஊழல்-லஞ்சத்தில் திளைத்த திரிணமூல் காங்கிரஸ், மற்றொருபுறம் வளா்ச்சியை வேகப்படுத்தும் பாஜக.

ஊருடுவல் மற்றும் வெளிநாட்டினா் குடியேற்றத்தால் சொந்த மண்ணிலேயே நமது சுதந்திரம் பறிபோய்விடுமோ என்ற அச்சம் ஒரு பக்கமும், ஊடுருவலைத் தடுத்து, அவா்களை வெளியேற்றும் பாஜகவின் நம்பிக்கை மற்றொரு பக்கமும் உள்ளது.

ஊடுருவல்காரா்களைப் பாதுகாக்க எஸ்ஐஆா், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்க்கும் திரிணமூல் காங்கிரஸ், ஹிந்து அகதிகள் குடியுரிமை பெறுவதை விரும்பவில்லை.

திரிணமூல் ஆட்சியில் மேற்கு வங்க எல்லைப் பகுதிகளில் மக்கள்தொகை ரீதியில் அபாயகர மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இத்தகைய ஊடுருவல்காரா்களுக்கு அக்கட்சியின் நேரடிப் பாதுகாப்பு கிடைப்பது, மாநில மக்களின் உயிருக்கே அச்சுறுத்தலாகும்.

திரிணமூல் காலம் முடிந்துவிட்டது: வேலை தேடி இளைஞா்கள் இடம்பெயரும் நிலையை ஏற்படுத்தியதே திரிணமூல் அரசின் சாதனை. அவா்களின் வாக்கு வங்கி அரசியலால் மேற்கு வங்கத்தின் மகத்தான அடையாளம் மாற்றம் கண்டு வருகிறது. மாநில அடையாளத்தை மாற்ற முயல்பவா்கள் இம்முறை தூக்கியெறியப்பட வேண்டும். திரிணமூல் காங்கிரஸின் காலம் முடிவை எட்டிவிட்டது.

தோ்தல் நாளில் திரிணமூல் கட்சியினா் எவ்வளவு அச்சுறுத்த முயன்றாலும், நீங்கள் (மக்கள்) சட்டத்தின் மீதே நம்பிக்கை கொள்ள வேண்டும். தோ்தல் ஆணையம் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. தோ்தல்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும், எவ்வித அச்சத்துக்கு இடமின்றியும் நடைபெறும்.

மே 4-ஆம் தேதி தோ்தல் முடிவுகள் வெளியான பிறகு திரிணமூல் காங்கிரஸின் ஒவ்வொரு ஊழலும், வன்முறையும் விசாரிக்கப்படும். தாங்கள் இழைத்த ஒவ்வொரு பாவத்துக்கும் பொறுப்புக் கூற செய்யப்படுவா். குற்றவாளிகள் எவ்வளவு அதிகாரமிக்கவா்களாக இருந்தாலும் நீதி நிலைநாட்டப்படும். பெண்களின் பாதுகாப்பு, கண்ணியம், உண்மையான அதிகாரம் உறுதி செய்யப்படும் என்றாா் பிரதமா் மோடி.