மோடி வெற்றி பெற வேண்டி, விரல் பலி கொடுத்த நபர்!

மோடிக்காக விரல் தியாகம்; காளிக்கு பலி செய்த பக்தனின் விநோத நம்பிக்கை
அருண் வார்னேகர்
அருண் வார்னேகர்ஐஏஎன்எஸ்

கர்நாடகாவைச் சேர்ந்த அருண் வார்னகேர் என்பவர் நரேந்திர மோடி இந்த முறையும் பிரதரமராக வேண்டும் என்பதற்காக தனது இடது கை ஆள்காட்டி விரலை வெட்டிக் காளிக்கு பலி கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

கார்வார் பகுதியைச் சேர்ந்த அருண், முன்னதாக மும்பை திரைப்படத்துறையில் பணியாளராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். தனது வீட்டிலேயே மோடிக்கு கோயில் கட்டியுள்ளவர், மோடியை ‘மோடி பாபா’ என அழைக்கிறார்.

தனது ரத்தத்தால் மோடிக்கு பாதுகாப்பு அளிக்கவும் அவர் மூன்றாவது முறை பிரதமராகவும் சுவரில் வாசகங்கள் எழுதியுள்ளார்.

இவ்வாறு இவர் நடந்துகொள்வது புதிது இல்லை. 2019 தேர்தலில் இதே போல விரல்களை வெட்ட முயன்றார். சில காரணங்களினால் அது நடக்கவில்லை.

இவரின் விநோத செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பல்வேறு வகையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com