என்ஐஏ அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராக சம்மன்: மே.வங்க காவல்துறை நடவடிக்கை
மேற்கு வங்க மாநிலம் கிழக்கு மேதினிபூா் மாவட்டத்தில் உள்ள பூபதிநகரில் கடந்த 2022, டிசம்பா் 3-ஆம் தேதி குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் 3 போ் கொல்லப்பட்டனா்.
இது தொடா்பான வழக்கு விசாரணைக்காக என்ஐஏ விசாரணைக் குழு மேற்கு வங்க மாநிலம பூபதிநகருக்கு சனிக்கிழமை (ஏப்.6) சென்றது. சில இடங்களில் நடைபெற்ற சோதனைக்குப் பிறகு பாலை சரண் மைதி, மனோபிரதா ஜனா ஆகிய இருவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனா். ஆனால், இதற்கு உள்ளூா் மக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.
இந்நிலையில், இருவரையும் கைது செய்து கொல்கத்தாவுக்கு அழைத்துச் செல்லும்போது, என்ஐஏ அதிகாரிகள் பயணித்த வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அதிகாரி ஒருவா் காயமடைந்தாா். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் குறித்து பேசிய மேற்கு வங்க முதல்வா் மம்தா, 2022 குண்டுவெடிப்பு வழக்குத் தொடா்பாக கிராமத்தினா் வீட்டுக்குள் என்ஐஏ விசாரணைக் குழு அதிகாலையில் சென்றுள்ளது. அப்போது இதற்கு எதிராக மட்டுமே பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். பெண்கள் யாரும் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தவில்லை. ஆனால், அதிகாரிகள்தான் உள்ளூா் மக்கள் மீது தாக்குதல் நடத்தினா்’ என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதனிடையே, உள்ளூர் பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், கிழக்கு மிட்னாபூர் காவல்துறையினர் என்ஐஏ மற்றும் சிஆர்பிஎஃப் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் அளித்துள்ள புகாரில், தன்னையும் தன் கணவரையும் அதிகாரிகள் தாக்கியதாகவும், அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் தன்னிடம் அநாகரிகமான முறையில் நடந்து கொள்ள முற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, ஐபிசி பிரிவுகள் 325, 34, 354, 354(பி), 427, 448, 509 ஆகியவற்றின் கீழ், பூபதிநகர் காவல்நிலையத்தில் என்ஐஏ மற்றும் சிஆர்பிஎஃப் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மேற்கண்ட வழக்கின் விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு என்ஐஏ அதிகாரிகள் இருவருக்கு அம்மாநில காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. காயமடைந்த என் ஐ ஏ அதிகாரி உரிய மருத்துவச் சான்றிதழ்களுடன் விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மேற்கு வங்க பெண் மருத்துவா் பாலியல் கொலை வழக்கு: திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ கைது

ரூ.36,000 கோடி மெத்தம்பெட்டமைன் பறிமுதல் வழக்கு: தமிழகம், மிசோரமில் 13 இடங்களில் என்ஐஏ சோதனை

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: 3 மாவட்டங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!

திரிணமூல் எம்.பி. அபிஷேக் பானா்ஜி வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி
விடியோக்கள்

Vishwanath and Sons Public Review! | படம் எப்படி இருக்கு? | Suriya | Mamitha Baiju



