மக்களவைத் தேர்தல்: ஓசையில்லாமல் இருக்கும் ஒடிஸா

மக்களவைத் தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கிவிட்டாலும் ஓசையில்லாமல் இருக்கிறது ஒடிஸா
மக்களவைத் தேர்தல்: ஓசையில்லாமல் இருக்கும் ஒடிஸா

ஜோர்ஹத்: ஒடிசா மாநிலம் ஜோர்ஹத் மக்களவைத் தொகுதியில் உள்ள மின் கம்பங்கள் ஒன்றிலும் தேர்தல் பதாகைகள் தொங்கவில்லை. இது நகரம், கிராமம் என்ற வித்தியாசம் ஏதுமின்றி ஓசையில்லாமல் இருக்கிறது ஜோர்ஹத்.

விரைவில் தேர்தல் நடைபெறவிருந்தாலும், தேர்தலுக்கான எந்த தடயமும் அங்கு தென்படவில்லை. ஒரு பிரசாரக் கூட்டத்தையும் காணவில்லை. ஆனால், அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டையின்போது, பல இடங்களில் காவிக் கொடிகள் பறந்ததைப் பார்க்க முடிந்தது.

மக்களவைத் தேர்தல்: ஓசையில்லாமல் இருக்கும் ஒடிஸா
12-ஆவது மக்களவை தேர்தல் (1998)

காங்கிரஸ் கட்சியின் கௌரவ் கோகோய் இங்கு போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல அரசியல் கட்சிகள் இங்கு போட்டியிடலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர், பாஜக தரப்பில் போட்டியிடும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் மாணவர் அணி தலைவர் தோபோன் குமார் கோகோயை எதிர்கொள்கிறார். இரண்டு கோகோய்கள் இங்கு மோதிக்கொள்கிறார்கள். இவர்களைத் தவிர இரண்டு சுயேச்சைகள் போட்டியிடுகிறார்கள்.

துவாராவைத் தவிர, சுதந்திரத்துக்கு முன்பு, அசாம் மாநிலத்தை 600 ஆண்டுகள் ஆண்ட அஹோம் சமுதாய மக்களை அதிகம் கொண்டது. ஹோம் ராஜாங்கத்தின் தலைநகராக இருந்த சிவசாகர் தற்போது ஜோர்ஹத் மக்களவைத் தொகுதிக்குள் வருகிறது.

சில காலமாக இது காங்கிரஸ் கோட்டையாக இருந்து, பிறகு2014ஆம் ஆண்டு பாஜக கோட்டையாக மாறியது. தற்போது அசாம் மாநிலத்தில் மொத்தமுள்ள 10 மக்களவைத் தொகுதிகளில் ஏழு தொகுதிகள் பாஜகவினுடையது. இரண்டில் காங்கிரஸ், ஒன்று சுயேச்சை வென்றுள்ளார். ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கனவே பாஜகவில் இணைந்துவிட்டதால், பலவீனமாகவே தேர்தலை சந்திக்கிறது காங்கிரஸ்.

மக்களவைத் தேர்தல்: ஓசையில்லாமல் இருக்கும் ஒடிஸா
தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை? பிரசாரத்தில் கமல் விளக்கம்

தற்போது, நிலவும் போட்டியும் கௌரவுக்கும் பாஜகவுக்கும் இடையேதான் என்றும், இரு கட்சிகளுக்கும் இடையே அல்ல என்றும் பேசப்படுகிறது.

அசாமிய நடுத்தர வர்க்கத்தினரின் ஆதரவு கௌரவுக்கே இருப்பதாகத் தோன்றுகிறது, மேலும் அவர் இளைஞர்களின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறார். அவரது தந்தை, மூன்று முறை முதல்வராக இருந்த தருண் கோகோயின் மறைவால், அசாமில் ஏற்பட்டுள்ள காங்கிரஸின் வெற்றிடத்தை கௌரவ் நிரப்ப வேண்டும் என்றும் ஒட்டுமொத்த கட்சியும் விரும்புகிறது.

1971 முதல் 1985 வரை கோகோய்தான் ஜோர்ஹத் தொகுதியை கைப்பற்றிவைத்திருந்தார். 2001 முதல் 2020 வரை டிடிபோர் பேரவைத் தொகுதியிலும் தொடர்ந்து வெற்றி பெற்றிருந்தார்.

ஜோர்ஹத் தலையெழுத்தை முடிவு செய்வது இரு சமுதாய மக்கள்தான். அஸ்ஸாமி, மற்றொன்று ஆதிவாசி சமுதாயத்தினர் (தேயிலை தோட்டத் தொழிலாளர்கள்). அரசுக்கு எதிரா இந்த சமுதாய மக்களுக்கு பல குறைகள் உள்ளன. ஆனால், அரசுக்கு எதிராக இவர்கள் பேச அஞ்சுகிறார்கள்.

வெள்ளம், நிலச்சரிவு, குடிநீர் வசதியின்மை, சாலை வசதிகள் போன்ற பல பிரச்னைகள் தங்களுக்கு இருக்கிறது. வேலைவாய்ப்பின்மை பெரிய பிரச்னையாக உள்ளது. கௌரவ் தான் வெற்றி பெற வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். எங்கள் பிரச்னைகளை அவர் நாடாளுமன்றத்தில் எழுப்புவார் என்று எதிர்பார்க்கிறோம். என்று கோகோய் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

இளைஞராக இருப்பதாலும், படித்தவர் என்பதாலும், கௌரவுக்கே மக்களின் ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆனால், மத்திய அரசு ஊழியர்கள் சிலர், மத்திய அரசின் பல திட்டங்களால், அசாம் மக்கள் பயனடைந்திருக்கிளார்கள். எனவே, பாஜகவே வெற்றி பெறும் என்கிறார்கள்..

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களோ, அரசியல்வாதிகளுக்கு தேர்தல் வரும்போதுதான் எங்கள் நினைவே வருகிறது. எங்களுக்கு ஒருநாள் கூலி ரூ.250 தான், இதில் ஒட்டுமொத்த குடும்பத்தையும் நடத்த முடியுமா? நாங்கள் எப்போதும் மோசமான வாழ்முறையையேக் கொண்டிருக்கிறோம் என்கிறார்கள்.

பாஜகவுக்கு ஜோர்ஹத் மிக முக்கிய தொகுதியாக உள்ளது. கௌரவைத் தோற்கடிக்க அனைத்து அஸ்திரங்களையும் பாஜக பயன்படுத்துகிறது. ஆனால், காங்கிரஸ் சொல்வது என்னவென்றால், பாஜகவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை என்பதுதான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com