உ.பி.யில் தனித் தொகுதிகள் எனும் புதிரை வெல்லும் வழி!

உத்தரப்பிரதேசத்தில் தனித் தொகுதிகள் எனும் புதிரை வெல்லும் வழி என்ன?
உ.பி.யில் தனித் தொகுதிகள் எனும் புதிரை வெல்லும் வழி!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் 17 (தனி) தொகுதிகள் உள்ளன. தனி தொகுதிகள் எனும் புதிரை வெல்லும் வழி என்ன என்பது குறித்த இங்கு ஒரு அலசல்.

17 தனி தொகுதிகள் - பட்டியலினத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு அவர்கள் ஒரு தொகுதியில் அதிகம் வசித்தால் தனி தொகுதியாக அறிவிக்கப்படும். அந்த மக்கள்தொகையின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட தொகுதிகள் தனி தொகுதிகள் ஆகும்.

உத்தரபிரதேசத்தின் அரசியல் வரைபடத்தில் இந்த தனி தொகுதிகள் என்பவை வித்தியாசமான நடைமுறையைக் கொண்டிருக்கும்.

உ.பி.யில் தனித் தொகுதிகள் எனும் புதிரை வெல்லும் வழி!
மக்களவைத் தேர்தல்: ஓசையில்லாமல் இருக்கும் ஒடிஸா

அதாவது, இந்த 17 தனி தொகுதிகளிலும் தேசிய பிரச்னைகளை அடிப்படையாக வைத்து வெற்றி பெற முடியாததால் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகம் வேறு விதமாக வகுக்கப்படும். இங்கே கட்சி சின்னங்கள் மற்றும் தலைவர்களைவிட வாழ்க்கையின் அடிப்படை பிரச்னைகளுக்கே முக்கியத்துவம்.

ஹிந்தி பேசும் மாநிலங்களில், இதயம் போன்று விளங்கும் உத்தரப்பிரதேசத்தின் இந்த 17 இடங்களை அல்லது பெரும்பான்மையான தொகுதிகளே, மாநிலத்தின் மீதமுள்ள 63 மக்களவைத் தொகுதிகளின் முடிவுகளுக்கு அடித்தளமாக இருப்பதால், தனி தொகுதிகளிலும் வெல்லும் கட்சியே மாநிலத்திலும் பெரும்பான்மை பெருகின்றன.

பாஜக, கடந்த முறை சரியான வியூகம் அமைத்து இரண்டு மக்களவைத் தேர்தல்களிலும் வெற்றிக்கொடி நாட்டியது. 2014ஆம் ஆண்டு அனைத்திலும் வெற்றி என்ற நிலையில், 2019ஆம் ஆண்டு இரண்டு தொகுதிகளை இழந்தது. இங்கு தலித்துகளின் ஆதிக்கம் மிகுந்திருந்தது.

இந்த 17 தொகுதிகளில், நகினா, புலந்த்ஷகர், ஆக்ரா, ஷாஜகான்பூர், பஹ்ரைச், பாரபங்கி உள்ளிட்டவையும் அடங்கும். இந்த 17 தொகுதிகள், மாநிலத்தின் மேற்குப் பகுதியிலிருந்து கிழக்கு வரை பரவியிருக்கின்றன.

உ.பி.யின் மொத்த மக்கள் தொகையில் 21 சதவீதம் பேர் பட்டியலினத்தவராக இருக்கின்றனர். ஒவ்வொரு தொகுதியிலும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின வாக்காளர்கள் கணிசமான அளவில் இருப்பதோடு, இந்த 17 தொகுதிகளில் அதிகளவில் இருப்பது தனி தொகுதிகளின் முக்கியத்துவத்திற்குக் காரணம். இந்த சதவீதமானது 11.7 சதவீத ஜாதவர்கள் (மிகப் பெரிய பிரிவு), 3.3 சதவீத பாசிகள், 3.15 சதவீத வால்மீகிகள், 1.2 சதவீத கோண்ட், தனுக், காதிக்ஸ் மற்றும் 1.6 சதவீதம் பிற சமூகத்தினர் எனப் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை உத்தரப்பிரதேசத்தில் பாஜக எச்சரிக்கையாகவே நடந்து கொண்டிருக்கிறது. ஜெயந்த் சௌத்ரி - ராஷ்ட்ரிய லோக் தளம், ஓபி ராஜ்பார் - எஸ்பிஎஸ்பி, சஞ்சய் நிஷாத் - நிஷாத், அனுப்ரியா படேல் - அப்னா தளம் (எஸ்) உள்ளிட்ட சிறிய சாதி அடிப்படையிலான குழுக்களைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் தங்கள் வேட்பாளர் பட்டியலில் சேர்த்துக்கொண்டுள்ளது.

உண்மையில், கடந்த இரண்டு மக்களவைத் தேர்தல்களின் போது, ​​ஜாதவ் அல்லாத பிற்படுத்தப்பட்ட சாதிகள், யாதவ் அல்லாத ஓபிசிக்கள் மற்றும் உயர் சாதியினர் மீது பாஜக தனது கவனத்தை செலுத்தியது, சாதிய அடிப்படையிலான அரசியலை மிகச் சரியாக கையாண்டு வருகிறது. மாநிலத்தில் உள்ள ஜாதவ்கள் எப்பொழுதும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஆதரவாகவும், யாதவர்கள் சமாஜ்வாதிக்கு ஆதரவாகவும் வாக்களிப்பது வழக்கம்.

அதோடு நின்றுவிடாமல், இந்த முறை, பாஜகவின் தொண்டர்களை வைத்து, ஏழைகளுக்கு ஆதரவான நலத்திட்டங்களை முன்னிலைப்படுத்தும் அதே வேளையில் மோடி அரசாங்கத்தின் கீழ் தலித்களின் நலன் பாதுகாப்பானது என்ற செய்தியை தலித்துகளை சென்றடையுமாறும் செய்துவிட்டது.

இங்கு ஆளும் கூட்டணிக்கு எதிராக 'இந்திய' கூட்டணி களமிறங்கியுள்ளது. எவ்வாறாயினும், தற்போதைய சூழ்நிலையில் அது சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தும்போது, எதிர்க்கட்சிகளுக்கு இது ஒரு வாய்ப்பாகவே மாறிவிடும். பிற்படுத்தப்பட்ட சமுதாய வாக்காளர்கள் மீதான பகுஜன் சமாஜ் கட்சியின் பிடி தளர்ந்து வருவதும் ஜாதவ் அல்லாத தலித்துகளின் முதல் தேர்வாக பாஜக உருவாவதற்கு ஒரு காரணமாகும்.

மேலும், சமாஜ்வாதி கட்சியின் கடந்த கால ஆட்சியின்போது, தலித்துகளின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு, மாநிலத்தின் பல பகுதிகளில் பெரும் சக்திவாய்ந்தவர்களாக அறியப்படும்ட யாதவர்களின் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டதால், சமாஜ்வாதி கட்சியின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதும் கடினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com