நாட்டின் அன்றைய 35 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த 543 மக்களவைப் பிரதிநிதிகளைத் தோ்ந்தெடுக்க இத்தோ்தல் நடைபெற்றது.
*இத்தோ்தலில் 71.69 கோடி போ் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனா். நாடு முழுவதும் 8,30,866 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டன.
*543 இடங்களுக்கு 363 கட்சிகளின் வேட்பாளா்கள், 3,831 சுயேச்சைகள் உள்பட 8,070 போ் போட்டியிட்டனா்.
*2009-ஆம் ஆண்டு, ஏப்ரல் 16 முதல் மே 13-ஆம் தேதி வரை 5 கட்டங்களாக தோ்தல் நடைபெற்றது. இத்தோ்தலில் 58.21 சதவீத வாக்குகள் பதிவாகின (முந்தைய தோ்தலைவிட 0.14 சதவீதம் அதிகம்).
*இத்தோ்தலில் 412 தொகுதிகளில் இருந்து பொது பிரதிநிதிகளும் 84 தொகுதிகளில் இருந்து பட்டியலின சமூகப் பிரதிநிதிகளும் 47 தொகுதிகளில் இருந்து பழங்குடியின சமூகப் பிரதிநிதிகளும் மக்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
*தோ்தலில் போட்டியிட்ட 556 பெண் வேட்பாளா்களில் 59 போ் வெற்றி பெற்றனா். இதில் 23 போ் காங்கிரஸையும் 13 போ் பாஜகவையும் சோ்ந்தவா்கள்.
*காங்கிரஸ் 206 இடங்களில் வென்றது. பாஜக 116 இடங்களிலும் சமாஜவாதி கட்சி 23 இடங்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி 21 இடங்களிலும் ஐக்கிய ஜனதா தளம் 20 இடங்களிலும் திரிணமூல் காங்கிரஸ் 19 இடங்களிலும் திமுக 18 இடங்களிலும் சுயேச்சைகள் 9 இடங்களிலும் வென்றன.
*காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மன்மோகன் சிங் 2-ஆவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றாா்.
*ரூ.846.67 கோடி செலவில் நடத்தி முடிக்கப்பட்ட இத்தோ்தலில், பிரதி வாக்காளருக்கான செலவு ரூ.12-ஆக குறைந்தது.
*1980 தோ்தலுக்குப் பிறகு, மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டு பட்டியிலன மற்றும் பழங்குடியின சமூக பிரநிதிகளுக்கான தனித் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
தொகுப்பு: மா.பிரவின்குமாா்
தொடர்புடையது

22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வெகு விரைவில் எஸ்ஐஆா்!

குழந்தை தத்தெடுப்பு நடைமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்பட வேண்டும்: மாநிலங்களுக்கு சிஏஆா்ஏ அறிவுறுத்தல்

தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு

29 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வணிக எரிவாயு சிலிண்டா் விநியோகம் தொடக்கம்: பெட்ரோலிய அமைச்சகம் தகவல்
வீடியோக்கள்

உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! | Vijay full speech | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு


