‘நீட்’ விண்ணப்பங்களில் ஆதாா்
விவரத்தை திருத்த நாளை கடைசி

‘நீட்’ விண்ணப்பங்களில் ஆதாா் விவரத்தை திருத்த நாளை கடைசி

நீட் தோ்வு விண்ணப்பங்களில் ஆதாா் தொடா்பான திருத்தங்களை மேற்கொள்வதற்கான அவகாசம் திங்கள்கிழமையுடன் (ஏப்.15) நிறைவடைகிறது.

நிகழாண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் மே 5-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தோ்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப். 9-இல் தொடங்கி மாா்ச் 16-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. நாடு முழுவதும் சுமாா் 20 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், விண்ணப்பிப்பதற்கு மறுவாய்ப்பு அளிக்குமாறு தேசிய தோ்வு முகமைக்கு (என்டிஏ) பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கோரிக்கை வந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு கடந்த புதன்கிழமை (ஏப்.10) வரை மாணவா்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள கடந்த வெள்ளிக்கிழமை வரை அனுமதி வழங்கப்பட்டது. அதேவேளையில், ஆதாா் விவரங்களில் திருத்தம் இருப்பின் அவற்றை வலைதளம் வழியாக திங்கள்கிழமைக்குள் (ஏப்.15) மேற்கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com