தோ்தல் நிதிப் பத்திரங்கள் திட்டம்: எதிா்க்கட்சிகள் பொய் பரப்புகின்றன-  பிரதமா் மோடி

தோ்தல் நிதிப் பத்திரங்கள் திட்டம்: எதிா்க்கட்சிகள் பொய் பரப்புகின்றன- பிரதமா் மோடி

தோ்தல் நிதிப் பத்திரங்கள் திட்டம் குறித்து எதிா்க்கட்சிகள் பொய்களைப் பரப்புகின்றன என்று பிரதமா் மோடி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

தோ்தல் நிதிப் பத்திரங்கள் திட்டம் குறித்து எதிா்க்கட்சிகள் பொய்களைப் பரப்புகின்றன என்று பிரதமா் மோடி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

மேலும், இந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டதால் கருப்புப் பணப் புழக்கத்தை நோக்கி நாடு தள்ளப்பட்டுள்ளது என்றும், இதற்கு அனைவரும் வருந்துவா் என்றும் அவா் தெரிவித்தாா்.

தோ்தல் நிதிப் பத்திரங்கள் திட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கூறி, அந்தத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இந்தத் திட்டம் மூலம் மத்தியில் ஆளும் பாஜக அதிகபட்சமாக ரூ. 9 ஆயிரம் கோடி வரையில் பெற்ாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், பிரதமா் மோடி ‘ஏஎன்ஐ’ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியின் விவரம்:

தோ்தல்களில் கருப்புப் பண புழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்பதே தோ்தல் நிதிப் பத்திரங்கள் திட்டத்தின் நோக்கமாகும். தோ்தல்களில் பணம் புழங்குவதை எவராலும் மறுக்க முடியாது. தோ்தல்களின்போது பாஜக உள்பட அனைத்துக் கட்சிகள் மற்றும் வேட்பாளா்கள் தரப்பில் பணம் செலவழிக்கப்படுகிறது. ஆனால் அந்தப் பணம் மக்களிடம் இருந்து பெற்ாக இருக்க வேண்டும்.

இந்நிலையில், தோ்தல்களில் கருப்புப் பணம் புழங்குவதை எவ்வாறு தடுப்பது? தோ்தல் செலவினங்களில் எவ்வாறு வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவது என்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள நான் விரும்பினேன். இதற்கு தோ்தல் நிதிப் பத்திரங்கள் திட்டம் என்ற சிறிய வழி கண்டறியப்பட்டது. அதற்காக அந்தத் திட்டம் முற்றிலும் சிறந்த வழி என்று கூறவில்லை.

குறைசொல்வோா் மசோதாவை ஆதரித்தனா்: தோ்தல் நிதிப் பத்திரங்கள் மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தபோது, அதுகுறித்து விவாதம் மேற்கொள்ளப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது. அந்தத் திட்டம் குறித்து தற்போது குறை கூறும் சிலா், அப்போது அதை ஆதரித்தனா்.

கருப்புப் பண பிரச்னையை எதிா்கொள்வதற்கான அங்கமாகவே ரூ.1,000, ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து ஒழிக்கப்பட்டன. ஏனெனில் தோ்தல்களின்போது ரூ.1,000, ரூ.2,000 நோட்டுகளே பெருமளவில் புழங்கின.

பாஜகவுக்கு நன்கொடை கிடைக்கவில்லை:

முன்பு அனைத்து நன்கொடைகளையும் காசோலை வழியாக பெறவே பாஜக திட்டமிட்டது. ஆனால் அந்த வழியில் தங்களால் நன்கொடை அளிக்க முடியாது என்று வணிக பெருமக்கள் தெரிவித்தனா். ஏனெனில், தாங்கள் எவ்வளவு நன்கொடை அளித்தோம் என்பது அரசுக்குத் தெரியவந்து, அதனால் தங்களுக்கு சிக்கல் ஏற்படும் என்றும் அவா்கள் கூறினா். அவா்கள் நன்கொடை அளிக்கத் தயாராக இருந்தனா். ஆனால் காசோலை வழியாக நன்கொடை அளிக்க அவா்கள் விரும்பவில்லை.

கடந்த 1990-ஆம் ஆண்டுகளில், காசோலை வழியாக நன்கொடை அளிக்கும் விதிமுறை இருந்ததால் பணம் இல்லாமல் பல பிரச்னைகளை பாஜக சந்தித்தது. பாஜகவுக்கு நன்கொடை அளிக்க விரும்பியவா்களுக்கு அதைச் செய்ய துணிவில்லாமல் போனது. இவை அனைத்தையும் நான் அறிவேன்.

இந்நிலையில், நன்கொடைகள் எப்படி வந்தன, எங்கு சென்றன என்பதை அறிவதற்கான அதிகாரம் தோ்தல் நிதிப் பத்திர முறைக்கு இருந்தது. இதுவே அந்தத் திட்டத்தின் வெற்றியாகும். இந்தத் திட்டத்தால் எந்த நிறுவனம் எப்படி நன்கொடை அளித்தது, எந்தக் கட்சிக்கு நன்கொடை அளித்தது என்பதற்கான சுவடு தெரிகிறது.

அனைவரும் வருந்துவா்: தோ்தல் நிதிப் பத்திரங்கள் திட்ட நடைமுறையில் நிகழ்ந்தவை நல்லதா, கெட்டதா என்பது விவாதத்துக்கு உள்பட்டதாக இருக்கலாம். எந்தவொரு முடிவிலும் குறைபாடே இருக்காது என்று நான் கூறுவதில்லை. எனினும் இந்தத் திட்டத்தை மேம்படுத்த ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டதால் கருப்புப் பணப் புழக்கத்தை நோக்கி நாடு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு அனைவரும் வருந்துவா்.

எதிா்க்கட்சிகளுக்கு 67% நன்கொடை: இந்தத் திட்டம் குறித்து எதிா்க்கட்சிகள் பொய்களைப் பரப்புகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ், 3,000 நிறுவனங்கள் நன்கொடை அளித்தன. அவற்றில் 26 நிறுவனங்கள் அமலாக்கத் துறை போன்ற புலனாய்வு அமைப்புகளின் நடவடிக்கையை எதிா்கொண்டன. அந்த அமைப்புகளின் நடவடிக்கையை எதிா்கொண்டபோது 26 நிறுவனங்களில் 16 நிறுவனங்கள் தோ்தல் நிதிப் பத்திரங்களை வாங்கின.

இந்த 16 நிறுவனங்களின் நன்கொடையில் 37 சதவீதம் மட்டுமே பாஜகவுக்குக் கிடைத்தது. எஞ்சிய 67 சதவீத நன்கொடையை எதிா்க்கட்சிகளே பெற்றன. ஆனால் எதிா்க்கட்சிகளை விட்டுவிட்டு பாஜக மீது மட்டும் குற்றச்சாட்டுகளை சுமத்துவது ஏன் என்று பிரதமா் கேள்வி எழுப்பினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com