அரச பரம்பரை - சாமானியர் இடையே போட்டி: இது மைசூரு-குடகு தேர்தல் களம்

இது மைசூரு-குடகு மக்களவைத் தொகுதியில் அரச பரம்பரை - சாமானியர் இடையே போட்டி நிலவுகிறது.
அரச பரம்பரை - சாமானியர் இடையே போட்டி: இது மைசூரு-குடகு தேர்தல் களம்

மைசூரு-குடகு மக்களவைத் தொகுதியில் அரச பரம்பரை மற்றும் அடித்தட்டு தொண்டருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ஒருபக்கம் கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது சொந்த மண்ணில் தனது நற்பெயரைப் பணயம் வைத்து வெற்றிக்காக உழைத்து வரும்நிலையில், பாஜக இங்கு தொடர்ந்து மூன்றாவது வெற்றியை நிலைநாட்ட உறுதிகொண்டுளள்து.

முக்கியத்துவம் பெறும் மைசூரு - குடகு மக்களவைத் தொகுதியில் பதினெட்டு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர், இவர்களில் வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்திருப்பது என்னவோ பாஜக சார்பில் போட்டியிடும் மைசூரு அரச குடும்பத்தின் வாரிசான யதுவீர் கிருஷ்ணதத்தா சாமராஜ வாடியாரும், மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.லட்சுமணனும் தான். இருவரும் முதல்முறையாக இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

அரச பரம்பரை - சாமானியர் இடையே போட்டி: இது மைசூரு-குடகு தேர்தல் களம்
12-ஆவது மக்களவை தேர்தல் (1998)

பாஜக தற்போதைய எம்பி பிரதாப் சிம்ஹாவை புறந்தள்ளிவிட்டு, திடீரென யதுவீரை வேட்பாளராக அறிவித்தது. இது ஒரு 'மாஸ்டர் ஸ்ட்ரோக்' என்று பார்க்கப்பட்டது. எம்.பி.யாக உள்ள சிம்ஹாவுக்கு மீண்டும்ட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பா.ஜ.க.விற்குள் ஏற்பட்ட உள் கருத்து வேறுபாடுகளை உயர்மட்ட தலைவர்கள் தலையீட்டு விரைவாக தீர்த்துவிட்டதாகவே கூறப்படுகிறது.

ஆனால் சிம்ஹா ஒரு வொக்கலிகா என்பதால், அந்த சமூக மக்களிடையே சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, அந்த அதிருப்தியை வாக்குகளாக மாற்றவே, வொக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த லட்சுமணனை காங்கிரஸ் வியூகம் வகுத்து களமிறக்கியிருக்கிறது. உண்மையில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியால், இந்த தொகுதியில் நிறுத்தப்பட்ட முதல் வொக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவர் லட்சுமணா என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம், ஒரு அரச வம்சத்திற்கு எதிராக சாமானியரை களம் காண வைத்து மிகமுக்கிய களமாக மாற்றியிருக்கிறது காங்கிரஸ். கர்நாடகத்தின் மிக சிக்கலான அரசியல் விவகாரத்தில் தற்போது குடகு தொகுதியும் அங்கமாக மாறியிருக்கிறது.

அரச பரம்பரை - சாமானியர் இடையே போட்டி: இது மைசூரு-குடகு தேர்தல் களம்
மேற்கு வங்கம்: தக்கவைக்கப் போராடும் மம்தா; கைப்பற்றத் துடிக்கும் மோடி!

கட்சியின் தேர்தல் பலத்தையும், ஜனதா தள எம்எல்ஏக்களையும் பயன்படுத்தி யதுவீருக்கு குறைந்தபட்சம் 1 லட்சம் வாக்குகள் அதிகம் கிடைக்கும் என்று பாஜக நம்புகிறது, அதே நேரத்தில் காங்கிரஸ் தனது பாரம்பரிய வாக்கு வங்கியை பலப்படுத்திக் கொண்டு லக்ஷ்மணாவின் வொக்கலிகா சமுதாய வேர்களை நம்பியிருக்கிறது.

இருப்பினும், மைசூருவின் மன்னராக அறியப்படும் யதுவீரருக்கு என ஆழமாக வேரூன்றிய மக்களின் ஆதரவை வாக்குகளாக மாறாமல் தடுக்கும் கடினமான பணியை காங்கிரஸ் எதிர்கொண்டுள்ளது. இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு வாடியார் குடும்பம் அரசியலுக்கு வந்திருப்பது காங்கிரஸின் பணியை மேலும் கடினமாக்கியிருக்கிறது.

யதுவீரின் பிரசாரம், பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும் என்பதோடு, தொழில்துறை வளர்ச்சியை வலியுறுத்துவதாக அமைந்திருப்பது மாணவர்கள் மற்றும் இளைஞர்களை நேரடியாக ஈர்க்கிறது. இதற்கு நேர்மாறாக, லக்ஷ்மணாவோ மைசூரு மற்றும் குடகின் வளர்ச்சிக்கான விரிவான பார்வையை கோடிட்டுக் காட்டுவதோடு, காங்கிரஸ் கட்சி அளித்த உத்தரவாதத் திட்டங்களை மக்கள் முன் கொண்டு வருகிறார்.

குடகு தொகுதியில் வொக்கலிகா சமுதாயம் ஒரு முக்கிய மக்கள்தொகையை கொண்டிருப்பதால், காங்கிரஸ் தனது பாரம்பரிய கோட்டைகளில் வெற்றிக்கொடி பறக்கவிடும் என்று நம்புகிறது. லக்ஷ்மணாவை வேட்பாளராக அறிவித்ததில், சித்தராமையாவின் தனிப்பட்ட கவனம் இருப்பதால், வெற்றி என்பது அவரது கௌரவத்தை வெளிப்படுத்துவதாக அமையும், எனவே, அவரது தலைமையின் மீதான நேரடி வாக்கெடுப்பாகவே இது பார்க்கப்படுகிறது.

பாஜகவின் அரச பரம்பரை வேட்பாளர், ஒரு கட்சியின் தொண்டரை வெல்வாரா? அல்லது பாஜகவின் வொக்காலிகா ஆதரவு வாக்குகளை காங்கிரஸ் சூறையாடுமா? ஜூன் 4ஆம் தேதி தெரியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com