சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படித்து பொதுத் தேர்வெழுதியிருக்கும் மாணவ, மாணவிகளுக்கு எப்போது தேர்வு முடிவுகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடப்பதால், தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுமா? என்ற கவலையும் உருவாகியுள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் நடைபெறும் பள்ளிகளில் படித்து பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுதிய மாணவ, மாணவிகளுக்கு மே மாதம் இரண்டாவது வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
பனிரெண்டாம் வகுப்புத் தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 2ஆம் தேதி முடிவடைந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக பத்து மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வினை இந்தியாவில் 39 லட்சம் பேர் எழுதியருக்கிறார்கள். தேர்வுகள் முடிவடைந்துவிட்ட நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோரின் எதிர்பார்ப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பதில் தான் உள்ளது.
இந்த தேர்வு முடிவுகளை அடிப்படையாக வைத்தே மாணவர்கள் தங்களது அடுத்தக்கட்ட பட்டப்படிப்புகள் குறித்து முடிவெடுக்க இயலும் என்பதால் இந்த தேர்வு முடிவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
வழக்கமாக சிபிஎஸ்இ இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும். இந்த ஆண்டும் அவ்வாறே வெளியாகும் என்றும், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மே மாதம் இரண்டாம் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் சிபிஎஸ்இ தரப்பில் இது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு மே முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் தொடங்குவதால், விடைத்தாள் திருத்தும் பணிகள் எவ்வாறு நடத்தப்படும் என்ற சந்தேகமும் பெற்றோரிடையே எழுந்துள்ளது.
கடந்த ஒரு சில ஆணடுகளாக சிபிஎஸ்இ 12 மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை ஒரே நாளில் வெளியிட்டு வருகிறது.
கடந்த 2023ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி தேர்வு முடிவு வெளியாகியிருக்கிறது. அதற்கு முன்பு 2019ஆம் ஆண்டும் மே முதல் வாரத்தில் தேர்வு முடிவு வெளியாகியிருக்கிறது. ஆனால், கரோனா காலங்களில் ஜூலை மாதத்தில்தான் தேர்வு முடிவு வெளியானது. 2024ஆம் ஆண்டு எப்போது வெளியாகும் என்று சிபிஎஸ்இ விரைவில் அறிவிப்பு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேதார்நாத் கோயில் நடை திறப்பு எப்போது?
திரையரங்குகளில் வெளியாகும் த்ரிஷ்யம் - 2!

இப்படியுமா? சிபிஎஸ்இ கணித வினாத்தாள் க்யூஆர் குறியீட்டுடன் ஆங்கில பாடல் இணைப்பா?

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியானது!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


