வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: இந்து சமய அறநிலையத் துறை நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!
/

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியானது!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியானது குறித்து...

News image

யுபிஎஸ்சி - DNS

Updated On :6 மார்ச் 2026, 4:03 pm IST

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சிவில் சர்வீஸ் தேர்வு (2025) 2025 ஆகஸ்ட் மாதத்தில் எழுத்துத் தேர்வுகளும், 2026 பிப்ரவரியில் நேர்முகத் தேர்வும் நடைபெற்றது.

இந்த நிலையில், தேர்வின் இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டு, தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 958 பேரை சிவில் சர்வீஸ் பணிகளுக்குத் தேர்வாணையம் பரிந்துரைத்துள்ளது.

இந்திய ஆட்சியர் பணி (IAS), இந்திய வெளியுறவு சேவை (IFS), இந்திய காவல்துறை (IPS), இந்திய வருவாய்ப் பணி (IRS) மற்றும் பல்வேறு மத்திய சேவைகளில் குழு ஏ மற்றும் குழு பி-இன் கீழ் அடங்கும்.

958 பேர் பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களைப் பொறுத்துதான், நியமனங்கள் இருக்கும்.

முதன்மையான ஐஏஎஸ் சேவையில் மொத்தம் 180 காலியிடங்கள் உள்ளன. அவற்றில் பொதுப் பிரிவினருக்கு 74, ஓபிசி பிரிவினருக்கு 47, பட்டியலினப் பிரிவினருக்கு 28, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 18, எஸ்டி பிரிவினருக்கு 13 என்றும் உள்ளன.

ஐஎஃப்எஸ் சேவையில் மொத்தம் 55 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் பொதுப் பிரிவினருக்கு 22, ஓபிசி-க்கு 15, எஸ்சி-க்கு 8, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 6, எஸ்டி பிரிவினருக்கு 4 என்று நிரப்பப்படும்.

தேர்வு முடிவுகள் upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அகில இந்திய அளவில் ராஜஸ்தானின் சித்தோர்கர் மாவட்டத்தைச் சேர்ந்த அனுஜ் அக்னிஹோத்ரி முதலிடமும், மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த ராஜேஸ்வரி இரண்டாமிடமும், சண்டிகரை சேர்ந்த அகான்ஷ் துல் மூன்றாமிடமும் பிடித்தனர்.

Summary

UPSC civil services examination results declared

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.