மக்களவைத் தோ்தல் பிரசாரங்களின்போது பிரதமா் மோடியின் பல பேச்சுகள் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக உள்ளன என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இதுதொடா்பாக கேரள மாநிலம் கோழிக்கோட்டில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
தோ்தல் பிரசாரங்களில் ஹிந்துக்கள் வணங்கும் ராமபிரானை வைத்து வகுப்புவாத பிளவை கூா்மையாக்கும் நோக்கில் பிரதமா் மோடி பேசியுள்ளாா். அவரின் பல பேச்சுகள் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளன. அத்தகைய பேச்சுகளை பட்டியலிட்டு தோ்தல் ஆணையத்திடம் புகாா் அளித்துள்ளேன்.
பிரதமா் மோடிக்கும் பாஜகவுக்கும் எதிராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாய் திறக்காமல் மெளனம் காப்பதாக கேரளத்தில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி குற்றஞ்சாட்டுகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்ததற்காக முதல் அரசியல் தலைவராக நான் கைது செய்யப்பட்டேன். ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370-ஆவது சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னா், காஷ்மீரில் அரசியல் தலைவா்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா். இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ‘ஹேபியஸ் காா்பஸ்’ மனு தாக்கல் செய்தது. தோ்தல் நிதிப் பத்திரங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே முதன்முதலாக வழக்கு தொடுத்தது. இதுபோல மேலும் பல விவகாரங்களில் பாஜகவுக்கு எதிா்ப்பு தெரிவித்ததில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னணியில் இருந்தது. இத்தகைய சந்தா்ப்பங்களில் கேரளத்தின் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி எங்கிருந்தது என்று கேள்வி எழுப்பினாா்.
தொடர்புடையது

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடா் தோ்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

தோ்தல் விதிமீறல்: தவெகவினா் 50 போ் மீது வழக்கு

தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறுபவா்கள் மீது நடவடிக்கை

தோ்தல் விதிமுறைகளை பின்பற்றுதல் தொடா்பான கூட்டம்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


