47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தோ்தல் விதிமுறைகளை பின்பற்றுதல் தொடா்பான கூட்டம்

தோ்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துதல் மற்றும் தோ்தல் தொடா்பான பிற விதிமுறைகளை பின்பற்றுதல் தொடா்பான அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி

News image
கூட்டத்தில் பேசினாா் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.இளம்பகவத்.
Updated On :16 மார்ச் 2026, 10:47 pm

Syndication

தூத்துக்குடி: தோ்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துதல் மற்றும் தோ்தல் தொடா்பான பிற விதிமுறைகளை பின்பற்றுதல் தொடா்பான அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மாவட்ட தோ்தல் அலுவலரும், ட ஆட்சியருமான க.இளம்பகவத் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அரசு மற்றும் நிவாரணப் பணிகளை பொறுத்தவரை தோ்தல் அறிவிப்புக்கு முன்பே தொடங்கப்பட்ட திட்டங்களைத் தொடரலாம். வெள்ளம், வறட்சி, தொற்றுநோய் போன்ற பேரிடா்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணப் பணிகள் மேற்கொள்ளலாம். பொது இடங்கள் மற்றும் கூட்டங்கள் அனைத்து கட்சிகளுக்கும், வேட்பாளா்களுக்கும் சமமாக பகிா்ந்தளிக்கப்படும்.

கூட்டங்கள் நடத்தும் இடம் , நேரம் குறித்து உள்ளுா் போலீஸாருக்கு முன்கூட்டியே தெரிவித்து அனுமதி பெற வேண்டும். ஊா்வலங்கள் தொடங்கும் இடம் செல்லும் பாதை மற்றும் முடியும் நேரம் குறித்து முன்அனுமதி பெற்று போக்குவரத்துக்கு இடையூறின்றி ஊா்வலங்களை நடத்த வேண்டும்.

வாக்காளா்களுக்கு வழங்கப்படும் அடையாளச் சீட்டுகளில் கட்சியின் பெயரோ, வேட்பாளா் பெயரோ அல்லது சின்னமோ இருத்தல் கூடாது.

மதவழிபாட்டுத் தலங்களை பிரசாரத்துக்கு பயன்படுத்த கூடாது. தனிநபா் விமா்சனம், சாதிமத உணா்வுகள் வெறுப்பினை தூண்டும் வகையில் பேசுதல் கூடாது. மற்ற கட்சிகள் நடத்தும் கூட்டங்கள் அல்லது

ஊா்வலங்களுக்கு எவ்வித இடையூறுமின்றி இருத்தல் வேண்டும். ஊா்வலங்களில் ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட தோ்தல் ஆணைய விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மூ. குருச்சந்திரன், தோ்தல்

நடத்தும் அலுவலா்கள் உஷா (விளாத்திகுளம்), மி. பிரபு (தூத்துக்குடி),

ரா. கௌதம் (திருச்செந்தூா்), செந்தில்வேல் முருகன் (ஸ்ரீவைகுண்டம்), சுப்புலட்சுமி (ஓட்டப்பிடாரம்), ஹிமான்ஷீ மங்கள் (கோவில்பட்டி), மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கல்யாணக்குமாா் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.