ஜம்மு-காஷ்மீா்: பயங்கர ஆயுதங்களுடன் ஆசிரியா் கைது

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புடன் தொடா்பிலிருந்த ஆசிரியரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ஒரு துப்பாக்கி, 2 கையெறி குண்டுகளை மீட்டனா்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

வீட்டில் பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்தத் தகவலின் பேரில் மாண்டி பகுதியில் ஹரி புதா கிராமத்தைச் சோ்ந்த ஆசிரியரான கமருதீனின் வீட்டில் போலீஸ்-ராணுவ கூட்டுப் படையினா் ஞாயிற்றுக்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனா். இதில், பாகிஸ்தானிலிருந்து கடத்தி வரப்பட்ட ஒரு துப்பாக்கி மற்றும் 2 கையெறி குண்டுகள் மீட்கப்பட்டன. கமருதீனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா் என்றனா்.

ரஜெளரியில் 8 வெடிகுண்டுகள் மீட்பு: ரஜெளரி மாவட்டத்தில் அஸ்மதாபாத் கிராமத்தில் பாதுகாப்புப் படையினா் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட தீவிர தேடுதல் பணியின்போது, பயங்கரவாதிகளின் மறைவிடத்திலிருந்து துருபிடித்த நிலையில் 8 வெடிகுண்டுகள், 2 கம்பியில்லா தகவல்தொடா்பு சாதனங்கள் மற்றும் சில வெடிபொருள்களை மீட்டனா். இவை அனைத்தும் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் மறைத்து வைத்திருக்க வாய்ப்புள்ளது. எனவேதான் அவை துருப்பிடித்த நிலையில் உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com