விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மோடி ஆட்சியில் ரயிலில் செல்வதே தண்டனை: ராகுல் காந்தி

மோடியின் ஆட்சியில் ரயிலில் செல்வதே தண்டனையாகிவிட்டது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :21 ஏப்ரல் 2024, 8:45 am

பிரதமர் மோடியின் ஆட்சியில் ரயிலில் செல்வதே ஒருவகையான தண்டனையாகிவிட்டது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:

"நரேந்திர மோடியின் ஆட்சியில் ரயிலில் செல்வதே ஒருவகையான தண்டனையாகிவிட்டது!

சாதாரண ரயில்களில் பொதுப்பெட்டிகளை குறைத்து 'எலைட் ரயில்களை' மட்டுமே ஊக்குவிக்கும் மோடி அரசால் அனைத்து பயணிகளும் துன்புறுத்தப்படுகிறார்கள்.

முன்பதிவு டிக்கெட்டுகளை பெற்ற மக்கள்கூட தங்கள் இருக்கைகளில் நிம்மதியாக உட்கார முடியாத நிலையில், சாமானியர்கள் தரையிலும், கழிப்பறையிலும் பதுங்கி பயணிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பிரதமர் மோடியின் அரசு, தனது கொள்கைகளால் ரயில்வே துறையை பலவீனப்படுத்தி, தகுதியற்றதாக நிரூபிக்க விரும்புகிறது, இதனைக்கொண்டு தன் நண்பர்களுக்கு விற்க ஒரு காரணத்தை தேடுகிறது.” என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.