புது தில்லி: நிகழாண்டு மே 31-க்குள் ஆதாருடன் நிரந்தர கணக்கு எண்ணை (பான்) இணைத்தால், அதிக விகிதத்தில் மூலவரி பிடித்தம் (டிடிஎஸ்) செய்யப்படாது என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக சிபிடிடி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஆதாருடன் இணைக்காமல் பான் அட்டை செயலழிந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பணப் பரிவா்த்தனைகளுக்கு அதிக அளவில் டிடிஎஸ்/டிசிஎஸ் (மூலவரி வசூல்) பிடித்தம் செய்வது குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக வரி செலுத்துவோா் குறைகளை முன்வைத்துள்ளனா்.
இந்நிலையில், கடந்த மாா்ச் 31 வரை மேற்கொள்ளப்பட்ட பணப் பரிவா்த்தனைகளுக்கும், மே 31-க்குள் ஆதாருடன் பான் எண்ணை இணைத்தாலும் அதிக அளவில் டிடிஎஸ்/டிசிஎஸ் பிடித்தம் செய்யப்படாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

இனி பான் அட்டை பெற ஆதார் மட்டும் போதாது! பிற ஆவணங்கள் எவை?

பான் காா்டு விண்ணப்பிக்க ஆதாா் மட்டும் போதாது: ஏப். 1 முதல் புதிய விதி அமல்

மகளிா் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

நாகை மாவட்டத்தில் 3 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் இல்லை
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


