கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

News image
Updated On :26 ஏப்ரல் 2024, 1:41 pm

DIN

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம் செய்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென்மேற்கு தில்லியின் துவாரகா மெட்ரோ ஸ்டேஷனில் சூப்பர் ஹீரோ உடை அணிந்து வரும் பெண் ஒருவர் ஸ்பைடர் மேன் உடையணிந்து வெளியே இருசக்கர வாகனத்தில் காத்திருப்பவருடன் செல்கிறார். பின்னர் இருவரும் இருசக்கர வாகனத்தில் கைகளை உயர்த்தியபடி செல்கின்றனர்.

இதுதொடர்பான விடியோவை அவர்கள் இன்ஸ்டாவிலும் பதிவிட்டனர்.

இந்த விடியோ 9.6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் 77,000 க்கும் மேற்பட்ட 'லைக்குகளையும்' பெற்று இணையத்தில் வைரலானது. தலைக்கவசம், ஓட்டுநர் ஒரிமம், பக்கவாட்டு கண்ணாடிகள், நம்பர் பிளேட் என எதுவும் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்றதாக அவர்கள் மீது புகார் எழுந்தது.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட தில்லி காவல்துறையினர் "ஸ்பைடர்மேன்" ஆதித்யா (20), மற்றும் அவரது தோழி "ஸ்பைடர்-வுமன்" அஞ்சலி (19) ஆகியோரை இன்று கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.