இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

ஒடிசாவில் காங்கிரஸ் ஆட்சிக்கான நேரம் வந்துவிட்டதாக தெரிவித்தார் ராகுல் காந்தி.
பிரசார மேடையில் ராகுல் காந்தி
பிரசார மேடையில் ராகுல் காந்தி

ஒடிசாவில் காங்கிரஸ் ஆட்சிக்கான நேரம் வந்துவிட்டதாக அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் கேந்ரபாரா பகுதியில் ராகுல் காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பொதுக்கூட்ட மேடையில் பேசிய அவர்,

ஒடிசாவில் பாரதிய ஜனதாவும், பிஜு ஜனதா தளமும் கணவன் மனைவியைப் போன்றவை. நீங்கள் போதுமான அளவு பான் (PANN) உண்டுவிட்டீர்கள். ( இங்கே PANN என்பது - வி.கே. பாண்டியன், அமித் ஷா, நரேந்திர மோடி, நவீன் பட்நாயக் ). இது காங்கிரஸ் கட்சிக்கான நேரம்.

பிரதமர் நரேந்திர மோடி 22 - 25 நபர்களுக்காக மட்டுமே அரசாங்கத்தை நடத்துகிறார். இதேபோன்றுதான் நவீன் பட்நாயக்கும். அவர் ஒடிசாவில் ஒருசிலருக்காக மட்டுமே அரசாங்கத்தை நடத்துகிறார். நாட்டின் எல்லா வளங்களும் இவர்கள் தேர்வு செய்துவைத்துள்ள அந்த ஒருசிலருக்கு மட்டுமே செல்கிறது.

நிலக்கரி, சுரங்க வளங்கள், விவசாய நிலங்கள் என அனைத்தும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒருசிலருக்காக கொள்ளையடிக்கப்படுகின்றன. காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், கொள்ளையடிக்கப்பட்ட வளங்கள் மீட்கப்படும். மக்களிடமே திரும்ப ஒப்படைக்கப்படும்.

பிரசார மேடையில் ராகுல் காந்தி
2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இதேபோன்று தெலங்கானாவில் பாஜகவும் பிஆர்எஸ் (பாரதிய ராஷ்ட்ரீய சமிதி) கட்சியும் கணவன் - மனைவி போன்றவவைதான். நாள்தோறும் நாடகங்களை அவர்கள் அரங்கேற்றுகின்றனர். தெலங்கானாவில் பாஜகவும் பிஆர் எஸ்ஸும் ஒன்றுதான் என காங்கிரஸ் நிரூபித்துள்ளது.

பிஆர்எஸ் கட்சியின் தலைவர் சில குறிப்பிட்ட நபர்களின் நலனில் மட்டுமே கவனமாய் இருந்தார். தெலங்கானாவில் ஏழைகளுக்கு பலன் சென்றடையும் வகையில் 5 உத்திரவாதங்களை காங்கிரஸ் அளித்தது. அதன் விளைவு தற்போது தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

ஒடிசாவில் மே 13ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதேபோன்று மே 20, 25 மற்றும் ஜுன் 1-ல் முறையே இரண்டு, மூன்று மற்றும் நான்காவது கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com