கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

காங்கிரஸ் கட்சி கர்நாடத்தை பிளவுபடுத்தி சீரழித்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்தார்.
நரேந்திர மோடி
நரேந்திர மோடி

காங்கிரஸ் கட்சி கர்நாடத்தை பிளவுபடுத்தி சீரழித்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்தார்.

கர்நாடக மாநிலம் உத்திர கன்னடாவில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்,

மாநிலத்தின் மகளுக்கு என்ன நேர்ந்தது என்ற கவலையில் நாடே மூழ்கியுள்ளது என்று ஹுபள்ளி பகுதியில் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி குறித்து பிரதமர் பேசினார்.

கர்நாடகத்தின் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு குறித்து நாடே கவலைகொள்கிறது. கர்நாடக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்கால பாதுகப்பை எண்ணி அஞ்சுகின்றனர். இது கர்நாடகத்துக்கு காங்கிரஸ் கட்சி செய்த பாவத்தின் விளைவுதான். கல்லூரி வளாகத்தின் இளம்பெண்ணை குத்திக்கொல்ல எப்படி தைரியம் வந்தது? வாக்குவங்கி அரசியலின் மீது பசிகொண்ட அரசியல் பின்புலம் தங்களை காக்கும் என குற்றவாளிகள் எண்ணுகின்றனர்.

நரேந்திர மோடி
இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

கர்நாடகத்தை சீரழிப்பதில் காங்கிரஸ் கட்சி மிகவும் பிஸியாக உள்ளது. மாநிலத்தில் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு பதிலாக குற்றம் செய்வதற்கும், நாட்டுப் பற்றுக்கும் எதிரான மனநிலையை மக்கள் மனதில் விதைக்கிறது.

வாக்கு வங்கியைக் காப்பாற்றிக்கொள்ளத் துடிக்கும் கட்சியினர் ராமர் கோயில் விழாவுக்கான அழைப்பையும் நிராகரித்துள்ளனர். நமது மன்னர்களை அவமதித்த நவாப்கள், பாட்ஷாக்கள், சுல்தான்களுக்கு எதிராக காங்கிரஸ் எதையும் பேசாது.

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் அதன் பிரதமர் யார்? இந்தியாவை யார் வழிநடத்துவார்கள் என பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com