முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்


உடல்நலக் குறைவு காரணமாக பாஜக எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஸ்ரீனிவாச பிரசாத் இன்று காலமானார்.
கர்நாடக மாநிலம், சாமராஜநகர் தொகுதி பாஜக எம்.பி. வி.ஸ்ரீனிவாச பிரசாத். இவர் உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை காலமானதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. அவருக்கு வயது 76. பிரசாத்துக்கு மனைவி மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர்.
ஸ்ரீனிவாச பிரசாத், சாமராஜநகரில் இருந்து 6 முறை எம்.பி.யாகவும், மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடில் இருந்து இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த மாதம் மார்ச் 18ஆம் தேதி அவர் அறிவித்தார். இது அவரது 50 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
ஸ்ரீனிவாச பிரசாத், 1999 முதல் 2004 வரை அடல் பிஹாரி வாஜ்பாய் அமைச்சரவையில் நுகர்வோர் விவகார உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் மத்திய அமைச்சராக பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...