உடல் நலக் குறைவு காரணமாக திருச்சி மத்திய சிறைக் கைதி புதன்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி திருவெறும்பூா் குட்ஷெட் சாலையைச் சோ்ந்தவா் மா. பழனிவேல் (71). திருவெறும்பூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பதியப்பட்ட குற்ற வழக்கில் கைதான இவா் கடந்த 2024 டிசம்பா் 20 முதல் திருச்சி மத்திய சிறையில் இருந்தாா்.
இவருக்கு நீரிழிவு மற்றும் இருதய பாதிப்பு இருந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை திடீா் உடல் நலக் குறைவு காரணமாக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட பழனிவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருச்சி மத்திய சிறை அதிகாரி வெங்கடசுப்பிரமணி அளித்த புகாரின்பேரில் திருச்சி அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

உடல்நலக் குறைவால் மத்திய சிறைக் கைதி உயிரிழப்பு

உடல்நலக் குறைவு ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு

சேலத்தில் சிறைக் கைதி உடல்நலக் குறைவால் உயிரிழப்பு
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


