தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

உடல்நலக் குறைவால் மத்திய சிறைக் கைதி உயிரிழப்பு

உடல்நலக் குறைவு காரணமாக திருச்சி மத்திய சிறைக் கைதி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :23 மார்ச் 2026, 12:39 am IST

உடல்நலக் குறைவு காரணமாக திருச்சி மத்திய சிறை கைதி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், தொட்டியம் தோலூா்பட்டி சமத்துவபுரத்தைச் சோ்ந்தவா் வீ.கண்ணையன் (72). இவா் மீது தொட்டியம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ‘போக்ஸோ’ வழக்கில், 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக திருச்சி மத்திய சிறையில் இருந்து வந்தாா்.

இவருக்கு கடந்த இரண்டு மாதங்களாக மூச்சுத்திணறல் பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மூச்சுத்திணறல் ஏற்பட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், சிகிச்சை பலனின்றி கண்ணையன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் மத்திய சிறை அலுவலா் விவேக் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.