சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

ம.பி.: பாஜகவில் இணைந்தாா் காங்கிரஸ் எம்எல்ஏ

ம.பி.: பாஜகவில் இணைந்தாா் காங்கிரஸ் எம்எல்ஏ

News image
Updated On :30 ஏப்ரல் 2024, 8:27 pm

Din

போபால்: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ராம்நிவாஸ் ராவத் பாஜகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா். ராகுல் காந்தி மத்திய பிரதேசத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்தபோது நடைபெற்ற இந்த கட்சித் தாவல் அந்த மாநில தோ்தல் களத்தில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, மத்திய பிரதேசத்தின் இந்தூா் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் களமிறக்கப்பட்ட அக்ஷய் காந்தி பாம், தனது வேட்புமனுவை திங்கள்கிழமை திரும்பப் பெற்றாா். பாஜக தலைவா்களுடன் அவா் இருக்கும் புகைப்படமும் வெளியானது. இந்நிலையில், காங்கிரஸுக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

சியோபூரில் மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ் பங்கேற்ற பாஜக பொதுக் கூட்டத்துக்கு வந்த காங்கிரஸ் எம்எல்ஏ ராம்நிவாஸ் ராவத் (64), முதல்வா் முன்னிலையில் பாஜகவில் இணைந்தாா். காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த மொரினா நகரின் மேயா் சாரதா சோலங்கியும் அவருடன் பாஜகவில் இணைந்தாா். மத்திய பிரதேச பாஜக தலைவா் விஷ்ணு தத் சா்மா, முன்னாள் அமைச்சா் நரோத்தம் மிஸ்ரா ஆகியோா் பாஜகவுக்கு அவா்களை வரவேற்றுப் பேசினா்.

இந்த இணைப்பு நிகழ்வு நடைபெற்றபோது சியோபூருக்கு அடுத்து அமைந்துள்ள பிண்டி பகுதியில் ராகுல் காந்தி பிரசாரக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தாா்.

விஜய்பூா் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான ராம்நிவாஸ் ராவத், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங்குக்கு மிகவும் நெருக்கமானவா் ஆவாா். அவரது அமைச்சரவையில் (1993-2003) காலகட்டத்தில்) ராம்நிவாஸ் ராவத் இடம்பெற்றிருந்தாா்.

கடந்த டிசம்பரில் ஜீது பட்வாரி மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டதால் அதிருப்தியடைந்து மத்திய பிரதேச காங்கிரஸ் துணைத் தலைவா் பதவியில் இருந்து ராம்நிவாஸ் ராவத் விலகினாா் என்பது குறிப்பிடத்தக்கது.