யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

புதைக்கப்பட்டவருக்கு உயிர்கொடுத்த தெருநாய்கள்!

நிலத் தகராறில் நால்வர் சேர்ந்து ஒருவரை மண்ணுக்குள் புதைத்துள்ளனர்

News image
நாய்கள் (கோப்புப்படம்)
Updated On :2 ஆகஸ்ட் 2024, 11:36 am

இணையதளச் செய்திப் பிரிவு

உத்தரப் பிரதேசத்தில் மண்ணுக்கடியில் புதைக்கப்பட்டவரைத் தோண்டியெடுத்த நாய்கள்.

உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் வசித்து வந்த 24 வயதான ரூப் கிஷோர் மற்றும் அப்பகுதியில் உள்ள அங்கித், கௌரவ், கரண் மற்றும் ஆகாஷ் ஆகிய நான்கு பேர் அடங்கிய குழுவினருக்கும் இடையில் நிலத் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கிஷோரின் வீடு புகுந்த நால்வரும், கிஷோரின் தாய் கண்முன்னே அவரைக் கடத்திச் சென்றுள்ளனர்.

கடத்திச் சென்றவர்கள், கிஷோரைத் தாக்கியுள்ளனர்; தாக்குதலின்போது, கிஷோர் மயக்கமடைந்திருக்கிறார். ஆனால், கிஷோர் இறந்துவிட்டதாக நினைத்த அவர்கள், கிஷோரை அவர்களின் பண்ணையில் புதைத்து அடக்கம் செய்துள்ளனர்.

இதனையடுத்து, கிஷோர் அடக்கம் செய்யப்பட்ட பகுதியில் இருந்த தெருநாய்கள், அடக்கம் செய்த பகுதியில் மண்ணைத் தோண்டியிருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, நாய்கள் மண்ணிற்கு அடியிலிருந்த கிஷோரின் உடலைக் கடித்த நிலையில், சுயநினைவிற்கு வந்த கிஷோர், அந்த இடத்தைவிட்டு தப்பி, ஊருக்குள் சென்றுள்ளார். கிஷோரைக் கண்ட ஊர்மக்கள், சிகிச்சைக்காக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவம் தொடர்பான வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர். கிஷோரைத் தாக்கியவர்களையும் தேடி வருவதாகக் கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.