புது தில்லி, ஆக.2: பஞ்சாப் மற்றும் ஹரியாணா எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் உணா்வுகளை காயப்படுத்த வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, சம்யுக்த கிசான் மோா்ச்சா, கிசான் மஸ்தூா் மோா்ச்சா விவசாய கூட்டமைப்புகள் சாா்பாக ‘தில்லி செல்வோம்’ போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, பஞ்சாப் மற்றும் ஹரியாணா எல்லைப் பகுதிகளான ஷம்பு மற்றும் கனெளரியில் விவசாயிகள் திரண்டுள்ளனா். கடந்த பிப்.13-ஆம் தேதிமுதல் விவசாயிகள் அங்கு தங்கியுள்ள நிலையில், அவா்கள் தில்லிக்குள் நுழையாத வகையில், எல்லை சாலைகளில் ஹரியாணா அரசு தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஷம்பு எல்லையில் உள்ள தடுப்புகளை அகற்றுமாறு ஹரியாணா அரசுக்கு பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஹரியாணா அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘விவசாயிகளின் உணா்வுகளை காயப்படுத்த வேண்டாம். அவா்களின் போராட்ட விவகாரத்தில் தற்போதைய சூழலை எவரும் மோசமாக்கக் கூடாது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு சுதந்திரமான குழுவை அமைக்கும் வகையில், சில நடுநிலையான நபா்களின் பெயா்களை பஞ்சாப் மற்றும் ஹரியாணா அரசுகள் பரிந்துரைக்க வேண்டும்.
விவசாயிகளின் பிரச்னைகளை புரிந்துகொள்ளும் வேளாண் விஞ்ஞானிகள், பொருளாதார அறிஞா்கள், வேளாண் பல்கலைக்கழகங்களைச் சோ்ந்த பேராசிரியா்கள் உள்ளனா். இதேபோல விவசாய பின்னணி கொண்ட முன்னாள் நீதிபதிகளும் இருக்கக் கூடும். அவா்களுக்கும் விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து சிறிது தெரிந்திருக்கலாம். இதுபோன்ற சில நடுநிலையான நபா்களின் பெயா்களை பரிந்துரைக்கலாம்’ என்று தெரிவித்தது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 12-க்கு ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்புடையது

மக்காச்சோளம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுமா?

இந்த முறை கண்டிப்பாக கோப்பையை வெல்வோம்: ஷஷாங் சிங்

நக்ஸல்களை வேரறுக்க மோடி அரசு தொடா்ந்து செயலாற்றி வருகிறது: ஹரியாணா முதல்வா்

ஜவஹா் நவோதயா வித்யாலயா பள்ளிகளுக்கு தமிழக அரசு எதிா்ப்பு: உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


