எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

இந்த முறை கண்டிப்பாக கோப்பையை வெல்வோம்: ஷஷாங் சிங்

பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த முறை கண்டிப்பாக கோப்பையை வெல்லும் என அந்த அணி வீரர் ஷஷாங் சிங் தெரிவித்துள்ளார்.

News image

ஷஷாங் சிங் - படம் | பஞ்சாப் கிங்ஸ் (எக்ஸ்)

Updated On :27 மார்ச் 2026, 7:03 pm IST

பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த முறை கண்டிப்பாக கோப்பையை வெல்லும் என அந்த அணி வீரர் ஷஷாங் சிங் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் நாளை (மார்ச் 28) முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாதை எதிர்கொள்கிறது.

கடந்த சீசனில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டி வரை முன்னேறியது. இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரிடம் தோல்வியடைந்தது கோப்பையை தவறவிட்டது.

இந்த நிலையில், இந்த முறை பஞ்சாப் கிங்ஸ் அணி கண்டிப்பாக கோப்பையை வெல்லும் என அந்த அணி வீரர் ஷஷாங் சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: வருகிற மே 31 ஆம் தேதி சின்னசாமி திடலில் பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதிப்போட்டியில் விளையாடி கோப்பையை வெல்லும் என்பது எனக்குத் தெரியும். இது வெறும் உணர்வு மட்டும் கிடையாது. கண்டிப்பாக நாங்கள் கோப்பையை வெல்வோம். இந்த முறை கோப்பையை வெல்வோம் என்பது என்னுடைய தன்னம்பிக்கை மட்டுமின்றி, அணியின் நம்பிக்கையும் கூட. அணியில் உள்ள அனைவரும் இந்த முறையை கோப்பையை வென்றுவிடுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றார்.

கடந்த ஐபிஎல் சீசனின் லீக் சுற்று முடிவில் 14 போட்டிகளில் 9 போட்டிகளில் வெற்றி பெற்று பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Punjab Kings player Shashank Singh has said that the team will definitely win the trophy this time.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.