ஹிமாசல் மேகவெடிப்பு: 40 பேர் மாயம்; மீட்புப் பணிகளுக்காக தற்காலிக பாலம்

வெள்ளநீர் குறைந்துள்ளதால், மீட்புப் பணிகளுக்காக தற்காலிக பாலம் அமைப்பு.
கடும் வெள்ளத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்கப்படும் பொதுமக்கள்
கடும் வெள்ளத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்கப்படும் பொதுமக்கள்பிடிஐ
Published on
Updated on
1 min read

ஹிமாசலப் பிரதேசத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.

மேலும், காணாமல் போன 40 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீட்புப் பணிகளுக்காக தற்காலிக பாலம் அமைத்து ராணுவத்துடன், தேசிய பாதுகாப்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை வீரர்கள் தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஹிமாசலப் பிரதேசத்தில் 3 மாவட்டங்களில் ஜூலை 31ஆம் தேதி மேகவெடிப்பு ஏற்பட்டது. ஹிமாசலின் குல்லு மாவட்டத்திலுள்ள நிர்மாண்ட், சாய்ன்ஞ், மலானா ஆகிய பகுதிகளிலும், மண்டி மாவட்டத்திலுள்ள பதார், ஷிம்லா மாவட்டத்திலுள்ள ராம்பூர் மண்டலங்களில் மேக வெடிப்பு ஏற்பட்டது.

மேகவெடிப்பால் நேர்ந்த வெள்ளப்பெருக்கில் பலர் சிக்கியுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. திடீர் வெள்ளத்தில் பாலங்கள், சாலைகள், வீடுகள் அடித்துச்செல்லப்பட்டன.

ராணுவ வீரர்கள், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர், இந்தோ - திபெத் எல்லைக் காவல்படை, மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை வீரர்கள் என 410 வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதிக அளவு வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், மீட்புப் பணிகளில் தொய்வு நிலை ஏற்பட்டது.

மீட்புப் பணிகளுக்காக தற்காலிக பாலம் அமைத்த வீரர்கள்
மீட்புப் பணிகளுக்காக தற்காலிக பாலம் அமைத்த வீரர்கள்பிடிஐ

தற்போது வெள்ளநீர் குறைந்துள்ளதால், மீட்புப் பணிகளுக்காக தற்காலிக பாலம் அமைத்து வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை மேகவெடிப்பில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காணாமல் போன 40 பேரைத் தேடும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ராம்பூர் மண்டலத்துக்குட்பட்ட சாமேஜ் கிராமத்தில் மட்டும் 30 பேர் காணவில்லை என மாநில பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

மேகவெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.50,000 இழப்பீடு அறிவித்துள்ளது மாநில அரசு. மேலும், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுடன் அடுத்த மூன்று மாதங்களுக்கு ரூ.5000 வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.

பருவமழை தொடங்கிய ஜூன் 27 முதல் ஆகஸ்ட் 3 வரை ஏற்பட்ட இயற்கை சீற்ற பாதிப்புகளால், ரூ.662 கோடி வரை மாநில அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஹிமாசல் அரவு தெரிவித்துள்ளது.

கடும் வெள்ளத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்கப்படும் பொதுமக்கள்
வயநாடு நிலச்சரிவு: 6-வது நாளாக தொடரும் மீட்புப் பணி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com