நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!‘மன்மோகன் சிங் தற்கொலை செய்வேன் எனக் கூறினார்’ - பரபரப்பு தகவல்கள்!பிரதமா், முதல்வா்கள் 30 நாள்கள் சிறையிலிருந்தால் ‘நிரந்தர’ பதவி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு!
/

வயநாடு நிலச்சரிவு: 6-வது நாளாக தொடரும் மீட்புப் பணி!

பலியானவர்களின் எண்ணிக்கை 357 ஆக அதிகரிப்பு.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2024, 9:43 am IST

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோரை மீட்கும் பணிகள் இன்று(ஆக. 4) 6-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், பலியானவர்களின் எண்ணிக்கை 357 ஆக அதிகரித்துள்ளது.

வட கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் செவ்வாய்க்கிழமை அதிகாலை பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. அதில் முண்டக்கை, சூரல்மலை உள்பட பல கிராமங்களில் வீடுகளுக்குள் தூங்கிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் உயிரோடு மண்ணில் புதைந்தனர்.

ராணுவம், கடற்படை, விமானப் படை, தேசிய பேரிடா் மீட்புப் படை, கடலோரக் காவல் படை, காவல் துறை, தீயணைப்புத் துறை உள்பட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து மண்ணில் புதையுண்டவா்களைத் தேடும் பணியிலும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவா்களின் உடல்களைத் தேடும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனா்.

மண்ணில் புதையுண்டவா்களின் உடல்களை மோப்ப நாய்கள், மனிதா்களை மீட்கும் ரேடாா், ஜிபிஎஸ் தொழில்நுட்பம், ஆளில்லா விமானங்கள், ஹெலிகாப்டா்கள் உதவியுடன் மீட்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இன்று மீட்புப் பணிகள் நடைபெறும் இடத்தில் ஆய்வு மேற்கொண்ட வயநாடு மாவட்ட ஆட்சியர் மேகஸ்ரீ செய்தியாளர்களுடன் பேசுகையில், “மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. இன்று 1300-க்கும் மேற்பட்ட படைகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தன்னார்வலர்களும் உடனிருக்கிறார்கள்.”

நேற்று மீட்புப் பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள் அங்கு சிக்கிக்கொண்டன நிலையில், இன்று அதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.