மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வயநாடு நிலச்சரிவு: மோடியிடம் அறிக்கை சமர்ப்பிப்பு!

மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் அறிக்கையை வழங்கினார்.

News image

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அறிக்கை அளித்த அமைச்சர் ஜார்ஜ் குரியன் - ANI

Updated On :4 ஆகஸ்ட் 2024, 11:33 am

வயநாடு நிலச்சரிவில் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

கேரளத்தைச் சேர்ந்தவரும், சிறுபான்மையினர் நலத் துறைக்கான மத்திய இணை அமைச்சருமான ஜார்ஜ் குரியன், பிரதமர் மோடியை, அவரின் இல்லத்தில் சந்தித்து அறிக்கையை வழங்கினார்.

கேரளத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் மத்திய மீட்புப் படை, ராணுவ வீரர்கள், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், காவல் துறையினர் உள்ளிட்டோரின் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து மோடிக்குத் தெரிவித்தார்.

வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட மலைக் கிராமங்களில் கடந்த 30ஆம் தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் ஏராளமான பொதுமக்கள் நிலத்தில் புதைந்தனர். வீடுகளும் பாதிக்கப்பட்டன.

மண்ணில் புதையுண்டவர்களை மீட்கும் பணிகளில் மத்திய படைகளுடன் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து 6வது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நிலத்தில் சிக்கி இதுவரை 357 பேர் உயிரிழந்திருப்பதாகக் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 25 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 150க்கும் மேற்பட்ட உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மோப்ப நாய்கள், ரேடார், வாக்கி டாக்கி ஆகியவற்றின் உதவியுடன் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று மீட்புப் பணிகளை பார்வையிட்டார். மேலும், நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்பு, மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகள் உள்ளிட்டவை குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் அறிக்கையாக சமர்ப்பித்தார்.

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என பலதரப்பில் இருந்து கோரிக்கை எழுந்து வரும் நிலையில், மோடியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.