தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மணிப்பூரில் 59,564 பேர் இடம்பெயர்ந்தனர்: முதல்வர் தகவல்

வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து 59,564 பேர் இடம்பெயர்ந்ததாகவும், 11,133 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் அந்த மாநில முதல்வர் என்.பிரேன் சிங் தெரிவித்தார்.

News image

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்

Updated On :5 ஆகஸ்ட் 2024, 10:45 pm

DIN

மணிப்பூரில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து 59,564 பேர் இடம்பெயர்ந்ததாகவும், 11,133 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் அந்த மாநில முதல்வர் என்.பிரேன் சிங் தெரிவித்தார்.

இது தொடர்பாக மணிப்பூர் சட்டப் பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ கே.ரஞ்சித் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து முதல்வர் பிரேன் சிங் திங்கள்கிழமை கூறியதாவது:

மாநிலத்தில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் 11,133 வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. 'ஒரு குடும்பத்துக்கு ஒரு லட்சம்' திட்டத்தின் கீழ் 2,792 பேரின் வங்கிக் கணக்குகளில் முதல் தவணையாக தலா ரூ.25,000 செலுத்தப்பட்டுள்ளது.

காங்போக்பி மாவட்டத்தில் 2,156 வங்கிக் கணக்குகளுக்கும், விஷ்ணுபூர் மாவட்டத்தில் 512 வங்கிக் கணக்குகளுக்கும் பணம் செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை விரைவில் செலுத்தப்படும்.

மணிப்பூரில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து 59,564 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். முழுவதுமாக தீயில் கொளுத்தப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு முதலில் நிதியுதவி அளிப்பது என்று மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. நில உரிமையாளர்கள் யார் என்பது தொடர்பான குழப்பம் காரணமாக இந்த நிதியை ஒதுக்கீடு செய்வதில் சற்று காலதாமதம் ஏற்பட்டது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.